ஸ்டம்பிங் செய்யப்பட்ட பந்துக்கு நோபால் கொடுத்தது ஏன்? இஷான் கிஷன் செய்த தவறால் கிடைத்த தோல்வி – ரூல்ஸ் சொல்வது என்ன?

Ishan-Kishan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று கவுகாத்தி நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவிக்க பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியின் போது இந்திய அணியின் பெற்ற தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இஷான் கிஷன் செய்த சில தவறுகள் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அவர் மட்டும் சற்று சுதாரித்து இருந்தால் இந்திய அணி நிச்சயம் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் என்றும் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டி20 போட்டிகளில் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தோல்விக்கு காரணமாக அமையும் என்று பலரும் கூறிவரும் வேளையில் நேற்றைய போட்டியே அதற்கு சிறந்து எடுத்துக்காட்டு என்று கூறலாம். ஏனெனில் நேற்றைய போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது 19-ஆவது அவரை வீச வந்த அக்சர் பட்டியில் தனது முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் இரண்டு ரன்களையும், மூன்றாவது பந்தில் பவுண்டரியம் கொடுத்து முதல் 3 பந்துகளிலேயே 10 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் கடைசி மூன்று பந்துகளையாவது சரியாக வீசி விடலாம் என்று நினைக்க நான்காவது பந்தினை அக்சர் பட்டேல் வீசும்போது மேத்யூ வேட் அந்த பந்தை தவறவிட்டார். அப்போது அந்த பந்தை பிடித்த இஷான் கிஷன் ஸ்டம்பிங் செய்து விட்டு அம்பயரிடம் அவுட் கேட்டார்.

- Advertisement -

ஆனால் மூன்றாவது அம்பயர் அந்த பந்தினை பரிசோதிக்கையில் அந்த பந்தினை நோபால் என்று அறிவித்தார். இதற்கு காரணம் யாதெனில் : கிரிக்கெட் விதிமுறைப்படி பந்து ஸ்டம்பை தாண்டும் முன்னரே விக்கெட் கீப்பர் பந்தை பிடித்தால் அதற்கு நோபால் வழங்க வேண்டும் என்பது விதி. ஏற்கனவே இதேபோன்ற தவறை ரிஷப் பண்ட் செய்திருந்த வேளையில் தற்போது இஷான் கிஷன் அதே தவறினை செய்தார். அந்த பந்தில் கிடைத்த ப்ரீ ஹிட் வாய்ப்பை பயன்படுத்திய மேத்யூ வேட் அந்த பந்தில் சிக்சரை விளாசினார்.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவை வீழ்த்திய பின்னர் ஆட்டம்போட்ட ஆஸி வீரர். புரட்டி எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் – தரமான சம்பவம்

அந்த நோபால் மற்றும் சிக்ஸ் மூலம் ஏழு ரன்களை தேவையில்லாமல் இந்திய அணி விட்டுக் கொடுத்தது. அதேபோன்று அந்த ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் ஸ்விச் ஹிட் அடிக்க நினைத்து பந்தை தவறவிட்டார். அதையும் இஷான் கிஷன் பிடிக்க தவறி பைஸ் மூலம் நான்கு ரன்கள் கிடைத்தது. இப்படி இஷான் கிஷன் செய்த தவறுகள் மூலம் 11 ரன்கள் கிடைக்கவே அந்த ஓவரில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 22 ரன்களை குவித்தது. பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்ற நிலையில் அதையும் அடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement