சூரியகுமார் யாதவை வீழ்த்திய பின்னர் ஆட்டம்போட்ட ஆஸி வீரர். புரட்டி எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் – தரமான சம்பவம்

Aaron-Hardie
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று கவுகாத்தி நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் 222 ரன்கள் குவித்தும் ஆஸ்திரேலிய அணியை தடுத்து நிறுத்த முடியாமல் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் இந்த போட்டி முழுவதும் இந்திய வீரர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தன்னை பெருமை அடைய வைப்பதாக போட்டி முடிந்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பாராட்டினை தெரிவித்து இருந்தார். மைதானத்தில் டியூ அதிகமாக இருந்ததால் இந்த இலக்கை தடுத்து நிறுத்த முடியாமல் போனது என்றும் அவர் வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஆரோன் ஹார்டி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டாக உலகின் நம்பர் ஒன் வீரரான சூரியகுமார் யாதவை வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த விக்கெட்டை வீழ்த்திய பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த ஆரோன் ஹார்டி அதிகப்படியாக அந்த விக்கெட்டை கொண்டாடியிருந்தார்.

அப்படி அவர் சூரியகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தும் போது முதல் இரண்டு ஓவர்களில் 20 மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். ஆனால் அதன்பின்னர் அவர் கடைசியாக வீசிய இரண்டு ஓவர்களில் தான் அவருக்கு சோதனை ஏற்பட்டது. ஏனெனில் முதல் இரண்டு ஓவர்களையுமே கட்டுக்கோப்பாக வீசி விக்கெட்டை எடுத்து ஆட்டம் போட்ட அவரை அவரது கடைசி இரண்டு ஓவர்களில் ருதுராஜ் தனது அதிரடியான பேட்டிங் மூலம் சோகம் அடைய வைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் போட்டியின் 14-வது ஓவரை அவர் வீசுகையில் அந்த ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 2 பவுண்டரி, திலக் வர்மா ஒரு பவுண்டரி என 19 ரன்கள் குவித்தனர். பின்னர் தனது கடைசி ஓவரினை வீச போட்டியின் 18-வது ஓவரில் ஹார்டி வந்தார். அந்த ஓவரில் மட்டும் மூன்று சிக்சர் ஒரு பவுண்டரி என 25 ரன்களை ருதுராஜ் கெய்க்வாட் அடித்து வெறுக்க இறுதியில் அவர் நான்கு ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான ஒரு சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியிலிருந்து வெளியேறிய முகேஷ் குமாருக்கு பதிலாக அணியில் இணைந்த சி.எஸ்.கே வீரர் – சூப்பர் சாய்ஸ்

அதாவது ஆஸ்திரேலிய அணி சார்பாக டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆன்ட்ரூ டையுடன் தற்போது அந்த முதலிடத்தை ஆரோன் ஹார்டி பகிர்ந்துள்ளார். இப்படி இந்த போட்டியில் முதல் இரண்டு ஓவர்களில் அட்டகாசமாக பந்துவீசி ஆட்டம் போட்ட ஆஸ்திரேலிய வீரரை பிற்பாதியில் ருதுராஜ் கெய்க்வாட் வெளுத்து வாங்கியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement