இந்திய அணியிலிருந்து வெளியேறிய முகேஷ் குமாருக்கு பதிலாக அணியில் இணைந்த சி.எஸ்.கே வீரர் – சூப்பர் சாய்ஸ்

Deepak
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று நவம்பர் 28-ஆம் தேதி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

- Advertisement -

அவர்கள் பெற்ற இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரினை தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியும் மிகச்சரியாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழந்து 225 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியினை ருசித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் : முகேஷ் குமார் தனது திருமணத்திற்காக செல்ல உள்ளதால் அவர் இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார் என்றும் அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் ஆவேஷ் கான் விளையாடுவார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மூன்றாவது போட்டியில் மட்டுமல்ல எஞ்சியுள்ள கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸை அப்படி நினச்சு தான் வாங்குனாங்க.. தோனிக்கு அப்றம் அவர் தான் சிஎஸ்கே கேப்டன்.. அஸ்வின் கணிப்பு

இதன் காரணமாக தற்போது முகேஷ் குமாருக்கு பதிலாக மாற்றுவீரராக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி டி20 வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்து வந்த தீபக் சாகர் காயம் காரணமாக தனது இடத்தினை தவறவிட்டிருந்த வேளையில் தற்போது மீண்டும் அவர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இம்முறை தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்வார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement