ஆசிய கோப்பை ஃபைனலுக்கு பாகிஸ்தான் மட்டும் வரவே வராது.. இந்தாங்க ஆதாரம் – ஆகாஷ் சோப்ரா வித்யாச பேட்டி

Aakash Chopra
- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இம்முறையும் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. அதனால் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் 8வது முறையாக கோப்பையை வென்று ஆசிய சாம்பியனாக 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதற்கு போட்டியாக இலங்கை அல்லது பாகிஸ்தான் ஆகிய அணிகளின் பைனலுக்கு வரப்போவது யார் என்று எதிர்பார்ப்பும் அனைவரிடமும் காணப்படுகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், நேபாள் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில் வங்கதேசம் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளால் வெளியேறியுள்ளது. மறுபுறம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றில் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளில் தலா 1 வெற்றியை பதிவு செய்து சமநிலையில் இருக்கின்றன.

- Advertisement -

பாகிஸ்தான் வராது:
இருப்பினும் அதில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்ததால் மிகவும் குறைவான ரன்ரேட்டை கொண்டுள்ளது. அதனால் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் பெரிய வெற்றியை பதிவு செய்தால் தான் ஃபைனலுக்கு வர முடியும் என்ற நிலையில் உள்ளது. அதே சமயம் அந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுகிறது.

அதனால் ஒருவேளை அப்போட்டி ரத்து செய்யப்பட்டால் அதிக ரன் ரேட் கொண்ட இலங்கை ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு பிரகாச வாய்ப்புகள் உள்ளது. மொத்தத்தில் இந்தியாவுடன் ஃபைனலில் மோதுவதற்கு இலங்கைக்கு தான் 90 சதவீத வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் 1984 முதல் 2022 வரை இதுவரை நடைபெற்ற எந்த ஆசிய கோப்பை தொடரின் ஃபைனலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது இல்லை என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

அதனால் இம்முறையும் பாகிஸ்தான் ஃபைனல் வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்றைய போட்டியில் நமக்கு இறுதியான முடிவு தெரிந்து விடும். இருப்பினும் இந்த தொடரின் வரலாற்றில் நீங்கள் கடினமாக முயற்சித்த போதிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஃபைனலை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்பதை வரலாறு கூறுகிறது”

இதையும் படிங்க: ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்த 3 இந்திய வீரர்கள் – விவரம் இதோ

“மேலும் மற்ற அணிகளுக்கு ரிசர்வ் டே கொடுக்காமல் இந்தியா – பாகிஸ்தான் ஃபைனலில் மோதுவதற்கு தேவையான முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகிய முக்கிய பவுலர்கள் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன் காயத்தால் வெளியேறியுள்ளது பாகிஸ்தானுக்கு மற்றுமொ ரு பின்னடைவாகும்” என்று கூறினார்.

Advertisement