ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்த 3 இந்திய வீரர்கள் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இலங்கையில் ஆசிய கோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் 3 இந்திய வீரர்கள் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளதால் இந்திய அணியின் பேட்டிங் வலிமை ஆரோக்கியமாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் தனது கரியரின் உச்சமாக தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சமீப காலமாகவே சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதோடு இந்த ஆசியகோப்பை தொடரிலும் இரண்டு அரை சதங்களுடன் 154 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று மற்றொருபுறம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் தற்போது தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்கு வந்துள்ளனர்.

- Advertisement -

விராட் கோலி எட்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அட்டகாசமான சதத்தை அடித்த விராட் கோலி மீண்டும் தனது பார்மை நிரூபித்துள்ளார். அதேபோன்று ரோகித் சர்மாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : தாய் நாடான நியூசிலாந்தை அடித்து நொறுக்கிய பென் ஸ்டோக்ஸ் தனித்துவமான உலக சாதனை – சச்சினின் 2009 சாதனையும் தகர்ப்பு

இப்படி உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் அனைவருமே சிறப்பான பார்மிற்கு வந்துள்ளது இந்திய அணிக்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது. ஒரு நாள் தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாபர் அசாம் தொடர்ந்து 863 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement