தாய் நாடான நியூசிலாந்தை அடித்து நொறுக்கிய பென் ஸ்டோக்ஸ் தனித்துவமான உலக சாதனை – சச்சினின் 2009 சாதனையும் தகர்ப்பு

Ben Stokes 182
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முக்கியமான 3வது போட்டி செப்டம்பர் 13ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக செயல்பட்டு 48.1 ஓவரில் 368 ரன்கள் எடுத்தது.

குறிப்பாக 2019 உலக கோப்பையை வென்றதற்கு முக்கிய பங்காற்றிய நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் அறிவித்த ஓய்வு முடிவை வாபஸ் பெற்று இந்த போட்டியில் ஒரு வருடம் கழித்து முதல் முறையாக களமிறங்கி சரவெடியாக விளையாடினார். அதிலும் அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் நியூசிலாந்து பவுலர்களை அமர்க்களமாக எதிர்கொண்ட அவர் 15 பவுண்டரி 9 சிக்சருடன் 182 (124) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

தாய் நாட்டுக்கு எதிராக:
அவருடன் டேவிட் மாலன் தம்முடைய பங்கிற்கு 96 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 369 என்ற மெகா இலக்கை துரத்திய நியூஸிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 39 ஓவரில் வெறும் 187 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 72 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் 181 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற நியூசிலாந்து 2 – 1* (4) என்ற கணக்கில் இத்தொடரில் பதிலடி கொடுக்க துவங்கி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து தங்களை வலுவான நடப்பு சாம்பியன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் 182 ரன்கள் அடித்த பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் சரித்திர சாதனையுடன் மாஸ் கம்பேக் கொடுத்தார். அதை விட பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பிறந்தவர் என்பதை எந்த ரசிகருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் தாம் பிறந்த நாட்டுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் அயர்லாந்தில் பிறந்த இயன் மோர்கன் கடந்த 2013ஆம் ஆண்டு இதே இங்கிலாந்துக்காக தம்முடைய தாய் நாடான அயர்லாந்து அணிக்கு எதிராக 124* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க39 ஓவர்.. 30 ரன்களை கூட தாண்டாத நியூசி 9 பேட்ஸ்மேன்கள்.. ஸ்டோக்ஸ் சரவெடியில் வாழ்வா – சாவா போட்டியில் சாதித்த இங்கிலாந்து

மேலும் இப்போட்டியில் அவர் 182 ரன்கள் குவித்தும் கடைசியில் இங்கிலாந்து 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆல் அவுட்டான அணியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் மற்றுமொரு தனித்துவ சாதனையும் பென் ஸ்டோக்ஸ் உடைத்துள்ளார். இதற்கு முன் 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 175 ரன்கள் அடித்தும் இந்தியா 347 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய சாதனையாகும்.

Advertisement