39 ஓவர்.. 30 ரன்களை கூட தாண்டாத நியூசி 9 பேட்ஸ்மேன்கள்.. ஸ்டோக்ஸ் சரவெடியில் வாழ்வா – சாவா போட்டியில் சாதித்த இங்கிலாந்து

ENg vs NZ Stokes Topley
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்த அடுத்த வெற்றிகளை பெற்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கிய இங்கிலாந்து இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து சொந்த மண்ணில் தலை நிமிர செப்டம்பர் 13ஆம் தேதி லண்டன் ஓவல் நகரில் நடைபெற்ற வாழ்வா – சாவா என்ற வகையில் அமைந்த 3வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் முதலில் பேட்டிங் செய்து சரவெடியாக விளையாடி 48.1 ஓவரில் 368 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஒருநாள் போட்டிகளில் ஓய்வு முடிவை வாபஸ் பெற்று முதல் முறையாக களமிறங்கி சரவெடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 15 பவுண்டரி 9 சிக்சருடன் 182 (124) ரன்களும் டேவிட் மாலன் 96 (95) எடுத்தனர். பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை தொடர்ந்து 369 என்ற பெரிய இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவு காத்திருந்தது.

- Advertisement -

பதிலடி வெற்றி:
ஏனெனில் டேவோன் கான்வே 9, வில் எங் 12, ஹென்றி நிக்கோலஸ் 4 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு கேப்டன் டாம் லாதமும் 3 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 37/4 என திணறிய நியூசிலாந்து 100 ரன்கள் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது போராடிய டார்ல் மிட்சேலும் 17 ரன்களில் அவுட்டாகி தலைகுனிவுடன் சென்றார்.

அந்த நிலைமையில் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கிளன் பிலிப்ஸ் – ரச்சின் ரவீந்திர ஆகியோர் 6வது விஷயத்துக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றினர். ஆனாலும் அதில் ரவீந்திரர் 28 ரன்கள் அவுட்டாக மறுபுறம் சவாலை கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடிய கிளன் பிலிப்ஸ் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 72 (76) ரன்கள் எடுத்து போராடி வீழ்ந்துந்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து வந்த வீரர்களும் கெய்ல் ஜெமிசன் 14, லாக்கி பெர்குசன் 5*, ட்ரெண்ட் போல்ட் 2, லிஸ்டர் 4 என பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 39 ஓவர்களில் நியூஸிலாந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகளையும் ரீஸ் டாப்லி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையும் படிங்க: சச்சின்லாம் ஓரமா தான் நிக்கணும், சத்தியமா விராட் கோலி அதை செய்யாம விடமாட்டாரு – வக்கார் யூனிஸ் அதிரடி கருத்து

குறிப்பாக பிலிப்ஸ் 72 ரன்கள் எடுத்தது தவிர்த்து எஞ்சிய 9 பேட்ஸ்மேன்களை 30 ரன்கள் கூட தாண்ட விடாத அளவுக்கு பந்து வீச்சில் இங்கிலாந்து பாலர்கள் மிரட்டினார்கள் என்றே சொல்லலாம். அதனால் 2 – 1* (4) என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ள இங்கிலாந்து சொந்த மண்ணில் இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement