சச்சின்லாம் ஓரமா தான் நிக்கணும், சத்தியமா விராட் கோலி அதை செய்யாம விடமாட்டாரு – வக்கார் யூனிஸ் அதிரடி கருத்து

Waqar Younis
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 8வது கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் போது சர்மா தலைமையிலான இந்தியா லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி லீக் சுற்றில் ஏமாற்றத்தை கொடுத்தாலும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் எதிர்பார்த்ததை போலவே பாகிஸ்தானுக்கு மீண்டும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சதமடித்து 122* ரன்கள் விளாசி 228 ரன்கள் வித்யாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சரித்திர வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை உடைத்து புதிய சரித்திரன் படைத்தார். அது போக அதிவேகமாக 47 சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையும் உடைத்த அவர் தற்போது 34 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் குறைந்தது இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

வக்கார் யூனிஸ் பாராட்டு:
அதனால் இன்னும் 3 சதங்களை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் மற்றுமொரு உலக சாதனையை உடைத்து 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சரித்திரத்தையும் விராட் கோலி படைப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் சச்சினின் 49 அல்லது 100 சதங்கள் சாதனைகளை விராட் கோலி அசால்ட்டாக உடைத்து அதையும் மிஞ்சிய சாதனைகளை படைப்பார் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வக்கார் யூனிஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல் நன்கு பிட்டாக இருக்கும் விராட் கோலிக்கு நிகராக சிங்கிள் எடுக்க முடியாமல் தடுமாறியதாகவும் பாராட்டும் அவர் இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கும் மற்ற வீரர்களுக்கும் சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது”

- Advertisement -

“சச்சின் டெண்டுல்கர் தம்முடைய கேரியரை முடிக்கும் போது 49 ஒருநாள் சதங்கள் அடித்திருந்தார். இந்த சமயத்தில் தம்முடைய கேரியரை முடிப்பதற்கு நீண்ட நாட்களைக் கொண்டுள்ள விராட் கோலி இன்னும் நிறைய சாதனைகளை படைப்பார் என்று உங்களிடம் நான் சத்தியமாக சொல்வேன். குறிப்பாக நாம் அனைவரும் நினைப்பதை விட அவர் இன்னும் அதிகமான சதங்கள் அடிப்பார். மேலும் காயத்திலிருந்து குணமடைந்த ராகுல் அப்போட்டியில் விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும் நிலைமையை சந்திப்பதற்காக வருந்துகிறேன்”

இதையும் படிங்க: 2023 உ.கோ அணியில் அஸ்வின் இல்லையே கவலைப்படாத்தீங்க.. அதை நானே பத்துக்குவேன் – குல்தீப் யாதவ் உற்சாக பேட்டி

“ஏனெனில் விராட் கோலி வெறித்தனமாக ஓடக்கூடியவர். குறிப்பாக ஒரு சிங்கிள் அல்லது எக்ஸ்ட்ரா ரன்னை கூட விட்டுக் கொடுக்காதவர். பேட்டிங், ஃபீல்டிங் போன்ற அனைத்திலும் சிறப்பாக இருக்க முயற்சிக்கும் அவர் தம்முடைய ஃபிட்னஸில் விரும்பி வேலை செய்கிறார்” என்று கூறினார். முன்னதாக விராட் கோலி 110 – 130 சதங்களை வரை அடிப்பார் என்று சோயப் அக்தர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement