2023 உ.கோ அணியில் அஸ்வின் இல்லையே கவலைப்படாத்தீங்க.. அதை நானே பத்துக்குவேன் – குல்தீப் யாதவ் உற்சாக பேட்டி

Kuldeep yadav 2
Advertisement

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அதற்கு தயாராகும் வகையில் தற்போது 2023 ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அந்தத் தொடரில் பந்து வீச்சு துறையில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஃபைனலுக்கு செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கடந்த 2017இல் அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி 2019 உலகக்கோப்பை முதன்மை ஸ்பின்னராக விளையாடிய அவர் அதன் பின் ஃபார்மை இழந்ததால் 2021, 2022 டி20 உலகக் கோப்பைகளில் வாய்ப்பு பெறவில்லை. இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்த அவர் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக நல்ல ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கவலைப்படாதீங்க:
முன்னதாக உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் குல்தீப், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய அனைவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பதால் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஒரு ஆஃப் ஸ்பின்னர் விளையாடுவது அவசியம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அஸ்வின் போன்ற ஆஃப் ஸ்பின்னர் தேவைப்படாத அளவுக்கு தம்மால் சிறப்பாக அசத்த முடியும் என்று குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் என்னை ஆஃப் ஸ்பின்னர் என்று நினைக்கவில்லை. மாறாக கிளாசிக்கல் லெக் ஸ்பின்னராக கருதுகிறேன். குறிப்பாக இடது கையில் வீசுவது மட்டுமே ஒரே வித்தியாசமாகும். ஏனெனில் என்னிடம் ஆஃப் ஸ்பின்னருக்கு நிகரான வேரியசன் மற்றும் கூக்லி போன்ற பந்துகள் இருக்கின்றன. அதனால் நமக்கு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்று நான் கருதவில்லை”

- Advertisement -

“அதாவது நம்முடைய அணியின் கலவை சிறப்பாக அமைந்திருக்கும் பட்சத்தில் 3 அல்லது 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டுமென்ற அவசியமில்லை என நினைக்கிறேன். அதனால் உங்களிடம் 2 தரமான ஸ்பின்னர்கள் இருந்தாலே வேலைகள் நடக்கும் என்று கருதுகிறேன். மேலும் எப்போதுமே நான் இடது அல்லது வலது என எந்த கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களை ஸ்டம்ப் லைன் வீசி பூட்ட விரும்புகிறேன்”

இதையும் படிங்க: 15 பவுண்டரி 9 சிக்ஸர்.. நியூசிலாந்தை பொளந்த பென் ஸ்டோக்ஸ்.. மாபெரும் சரித்திர சாதனையுடன் ஓய்விலிருந்து மாஸ் கம்பேக்

“குறிப்பாக அதிரடியாக பேட்டை சுழற்றுவதற்கான வாய்ப்பை கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு நடந்தால் பேட்ஸ்மேன் எளிதாக ஷாட்களை அடிப்பார். எனவே நல்ல லைனை பின்பற்றி பேட்ஸ்மேன்களை ஒரே இடத்தில் பூட்ட முயற்சிப்பது என்னுடைய இலக்காகும்” என்று கூறினார். முன்னதாக 2022 டி20 உலக கோப்பை உட்பட வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முன்பு போல பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதாலேயே அஸ்வின் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement