15 பவுண்டரி 9 சிக்ஸர்.. நியூசிலாந்தை பொளந்த பென் ஸ்டோக்ஸ்.. மாபெரும் சரித்திர சாதனையுடன் ஓய்விலிருந்து மாஸ் கம்பேக்

Ben Stokes 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2019 உலகக் கோப்பை ஃபைனலில் மோதியப்பின் முதல் முறையாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் இந்த ஒருநாள் தொடரில் மோதியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த நிலையில் நடைபெற்ற இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றிகளை பெற்றதால் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி செப்டம்பர் 13ஆம் தேதி புகழ்பெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பத்திலேயே ஜானி பேர்ஸ்டோ கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட்டும் அவருடைய வேகத்திலேயே 4 ரன்களில் கிளீன் போல்டானார். அதனால் 13/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய இங்கிலாந்துக்கு அடுத்ததாக மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்ரோக்ஸ் களமிறங்கினார்.

- Advertisement -

புதிய சாதனை கம்பேக்:
குறிப்பாக 2019 உலகக்கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று முதல் சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த வருடம் பணிச்சுமை காரணமாக ஓய்வு பெற்றார். இருப்பினும் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையை தக்க வைப்பதற்கு நீங்கள் விளையாடுவது அவசியம் என்று கேப்டன் ஜோஸ் பட்லர் வைத்த கோரிக்கையை ஏற்ற அவர் ஓய்வு முடிவை வாபஸ் பெற்று மீண்டும் விளையாடப் போவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

அந்த நிலையில் முதலிரண்டு போட்டியில் விளையாடாத அவர் இந்த போட்டியில் தான் முதல் முறையாக களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். அவருக்கு மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் மாலன் நங்கூரமாக நின்று கை கொடுத்ததை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

நேரம் செல்ல செல்ல அதிரடி அதிகப்படுத்தி சதமடித்த அவருடன் 3வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டேவிட் மாலன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போல்ட் வேகத்தில் 96 (95) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 38, லியாம் லிவிங்ஸ்டன் 11 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து நியூசிலாந்து பவுலர்களை பட்டைய கிளப்பிய பென் ஸ்டோக்ஸ் 15 பவுண்டரி 9 சிக்ஸருடன் 182 (124) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதையும் படிங்க: என்னன்ன பேசுனாங்க.. கடைசியில் இலங்கையின் சாதனை வெற்றி நடையை நிறுத்தி – பாகிஸ்தானுக்கு கை கொடுத்த இந்தியா

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் சரித்திர சாதனை தம்முடைய கம்பேக் போட்டியில் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜேசன் ராய் 180 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 48.1 ஓவரில் இங்கிலாந்து 368 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

Advertisement