என்னன்ன பேசுனாங்க.. கடைசியில் இலங்கையின் சாதனை வெற்றி நடையை நிறுத்தி – பாகிஸ்தானுக்கு கை கொடுத்த இந்தியா

IND-vs-PAK-Asia-Cup
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஆசிய கோப்பை கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்தியாவை எளிதாக தோற்கடிப்போம் என்று வழக்கம் போல நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மார் தட்டினார்கள். குறிப்பாக கேஎல் ராகுல் போன்ற காயத்தை சந்தித்த முக்கிய வீரர்கள் எவ்விதமான போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக களமிறங்குவது இந்தியாவுக்கு பின்னடைவு என்று அவர்கள் சொன்னார்கள்.

அதே போல 4வது இடத்தில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், இசான் கிசான் ஆகியோரில் விளையாடப் போவது யார் என்று தெரியாமல் இந்தியா குழம்பியிருப்பதாகவும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மொத்தத்தில் அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது வீரர்களை சோதிப்பது போன்ற செயல்களால் தங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை காயங்களை சந்திக்காத வீரர்களுடன் ஃபிட்டாக நன்கு செட்டிலாகியுள்ள அணியாக திகழும் பாகிஸ்தான் நிச்சயமாக தோற்கடிக்கும் என்று அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் நிறைய பேட்டிகளை கொடுத்தனர்.

- Advertisement -

கை கொடுத்த இந்தியா:
அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டியிலேயே எதிர்பார்த்தது போல ஷாஹீன் அஃப்ரிடிக்கு எதிராக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் தடுமாறியதால் 66/4 என திண்டாடிய இந்தியாவை பலவீனமாக இருப்பதாக சொல்லப்பட்ட மிடில் ஆர்டரில் இஷான் கிசான் – ஹர்டிக் பாண்டியா ஆகியோர் காப்பாற்றி பதிலடி கொடுத்த நிலையில் மழை வந்து போட்டியை தடுத்தது. அதைத்தொடர்ந்து நேபாளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை தெறிக்க விட்டு 224 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை வெற்றியை சுவைத்தது.

குறிப்பாக ஷாஹீன் அஃப்ரிடி போன்ற அதே போல பவுலர்களை இந்திய டாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்தனர். மறுபுறம் படுதோல்வியை சந்தித்து மோசமான ரன்ரேட்டை பெற்ற பாகிஸ்தான் ஃபைனலுக்கு செல்ல செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான போட்டியில் இலங்கையை எப்படியாவது இந்தியா தோற்கடிக்க வேண்டும் என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

அந்த நிலைமையில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 213 ரன்கள் மட்டுமே குவித்தாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 13 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற ஆசிய கிரிக்கெட் அணி என்ற சரித்திரம் படைத்து வெற்றி நடை போட்ட இலங்கை தோற்கடித்து பாகிஸ்தானுக்கு இந்தியா கை கொடுத்துள்ளது.

அதன் காரணமாக தப்பிய பாகிஸ்தான் கடைசி வாய்ப்பாக இலங்கைக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் ஃபைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமையில் இருக்கிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் என்னென்னவோ பேசிய பாகிஸ்தானுக்கு கடைசியில் கை கொடுக்க வேண்டிய நிலைமையில் சிறப்பாக செயல்பட்டு இலங்கையை வீழ்த்திய இந்தியா நண்பனாக மறைமுகமாக உதவி செய்துள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: இந்தியா பாடம் கற்பிச்சிட்டாங்க.. இப்டி ஸ்கூல் பசங்க மாதிரி இருந்தா நெதர்லாந்தை கூட வீழ்த்த முடியாது – பாக் அணி பற்றி கம்ரான் அக்மல்

அதனால் ஆரம்பத்தில் தோற்க வேண்டும் என்று நினைத்த பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நேற்றைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்ததுடன் இலங்கை வீழ்ந்ததும் அந்த வெற்றியை சமூக வலைதளங்களிலும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement