அந்த வீக்னெஸ் வெச்சு பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்து விடலாம் – இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை

Virat Kohli IND vs PAK
- Advertisement -

ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஐக்கிய அரபு நாடுகளில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையில் ஆசியாவின் டாப் 6 அணிகள் கோப்பைக்காக மோதினாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் எல்லை பிரச்சினை கடந்த 10 வருடங்களாக இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வரும் இவ்விரு அணிகள் கடைசியாக இதே துபாயில் மோதிய போது வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலக கோப்பையில் தோற்கடித்து பாகிஸ்தான் சாதனை படைத்தது.

INDvsPAK

- Advertisement -

அதனால் தலைகுனிவை சந்தித்த இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா தலைமையில் நடப்பு ஆசிய சாம்பியனாக களமிறங்குவதால் தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வருடம் இந்தியா தோற்க முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் கடைசி நேரத்தில் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அதனால் இந்தியா தப்பித்து விட்டதாக தெரிவிக்கும் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாபர் அசாம் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இப்போதும் நாங்கள் வெல்வது உறுதி என்று சவால் விடுத்து வருகின்றனர்.

சுமாரான சுழல்:
இருப்பினும் இந்திய அணியுடன் ஒப்பிடும் போது அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் சற்று பலம் குறைந்த அணியாகவே காட்சியளிக்கிறது. அந்த அணியின் பலமாக கருதப்படும் வேகப்பந்து வீச்சு துறையில் சாகின் அப்ரிடி விலகியுள்ளது ஏற்கனவே பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுழல் பந்துவீச்சு துறையில் பெரிய அளவில் பலமாக இல்லை. குறிப்பாக சடாப் கான், முகமத் நவாஸ், உஸ்மான் காதர் ஆகியோர் அனுபவம் வாய்ந்த தரமான சுழல் பந்துவீச்சாளர்களாக இல்லை என்பதே நிதர்சனம்.

Pak

மறுபுறம் பாகிஸ்தானை தவிர்த்து இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைந்துள்ளனர். இந்திய அணியில் யுஸ்வென்ற சஹால், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா என அனுபவம் வாய்ந்த தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதை போல் ஆப்கானிஸ்தானில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலர் ரசித் கானும் இலங்கையில் மாயாஜாலம் நிகழ்த்தக்கூடிய நல்ல பார்மில் இருக்கும் வணிந்து ஹசரங்காவும் உள்ளனர்.

- Advertisement -

பெரிய வீக்னெஸ்:
எனவே பலவீனமான சுழல் பந்துவீச்சை கொண்டிருப்பது பாகிஸ்தானின் வெற்றியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா அதை பயன்படுத்தி இந்தியா போன்ற அணிகள் எளிதாக வெற்றி பெறலாம் என கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் அவர்களிடம் விக்கெட் எடுக்கும் ஸ்பின்னர்கள் கிடையாது. அவர்களிடம் நிறைய சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் விக்கெட்டுக்கள் எடுப்பார்களா? சடாப் கான் சமீபத்திய பிஎஸ்எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் கூட விக்கெட்டுகள் எடுக்கவில்லை”

Chopra

“எனவே சஹால் அல்லது ரசித் கான் போல அவர் உங்களுடைய விக்கெட் எடுக்கும் பவுலர் கிடையாது. அதேபோல் மிகவும் இளமையாக இருக்கும் உஸ்மான் காதர் விக்கெட்டுக்களை எடுப்பவராக இருந்தாலும் குறைவான அளவு மட்டுமே கிரிக்கெட் விளையாடியுள்ளார். நவாசும் அதே கதைதான். துபாய் மைதானம் பெரிய அளவில் சுழல் பந்து வீச்சுக்கு கைகொடுக்காது என்றாலும் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுப்பது அவசியமாகும். அந்த வகையில் உண்மையாக அவர்களிடம் அது போன்ற பவுலர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“அதேபோல் அவர்களிடம் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அனுபவம் வாய்ந்தவர்களாக இல்லை. நசீம் ஷா சமீபத்தில் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்தாலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் விளையாடவில்லை. சன்வாஸ் தஹானி பிஎஸ்எல் தொடரில் அசத்தினார். ஆனால் அவர் சர்வதேச அளவில் எந்தளவுக்கு விளையாடியுள்ளார்? ஹஸ்னைனும் அதே போன்றவர் தான்.

இதையும் படிங்க : மனைவி குழந்தைகளுடன் ஒரு மணிநேரம் விமான நிலையத்தில் தவித்த இந்திய வீரர் – நடந்தது என்ன?

அவர்களிடம் ஹாரீஸ் ரவூப் மட்டும் அனுபவத்துடன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் அவர்கள் சாஹீன் அப்ரிடியை மிகவும் மிஸ் செய்யப் போகிறார்கள். ஏனெனில் அவர் இல்லாமல் அவர்களின் வேகப்பந்து வீச்சு அனுபவமற்றதாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement