
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அதற்குத் தயாராவதற்காக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரை 2 – 0* (3) என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. அந்தத் தொடரில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.
அவர்களுக்கு பேக்-அப் துவக்க வீரராக தேர்வான ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கினார். இருப்பினும் அடுத்தப் போட்டியிலேயே விராட் கோலி வந்ததால் அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் எப்படியும் ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் துவக்க வீரராக விளையாடப் போவதில்லை என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
எனவே காயத்தால் உறுதியாக விளையாடுவார் என்று சொல்ல முடியாத ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜை தேர்ந்தெடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பேட்டிங் வரிசை செட்டாக இருப்பது போல் தெரிகிறது. ரோஹித் சர்மா மீண்டும் அடிக்கத் துவங்கியுள்ளார். துணைக் கேப்டன் சுப்மன் கில் நல்ல ஃபார்மில் உள்ளார். விராட் கோலியின் ஃபார்முக்கு வந்துவிடுவார்”
“இல்லையென்றாலும் கடவுளின் அருளால் இந்தியா அவரை அணியிலிருந்து நீக்க போவதில்லை. ஸ்ரேயாஸ் 4, ராகுல் அல்லது ரிஷப் பண்ட் அல்லது அக்சர் படேல் 5வது இடத்தில் விளையாடுவார்கள். எனவே ஜெய்ஸ்வால் உங்களுக்குத் தேவைப்பட மாட்டார் என்பதை தற்போதைய சாத்தியக்கூராக இருக்கிறது. நீங்கள் பேட்டிங் வரிசையில் இடது – வலது கை கலவையும் இருக்க விரும்புவீர்கள்”
“ஸ்ரேயாஸ் ஐயரை நீங்கள் கழற்றி விட பார்த்தது உங்களுக்கே ஆபத்தாக முடிந்தது. எனவே ஜெய்ஸ்வாலை நீங்கள் விளையாடாவிட்டால் ஏன் சாம்பியன்ஸ் டிராபிக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்? அது போன்ற சூழ்நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக உங்களுக்கு அனுபவமிக்க பவுலிங் அட்டாக் தேவைப்படுகிறது”
இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 3வது ஒன்டே நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“அதனால் நீங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்புவீர்கள். அந்த நிலைமையில் சிராஜ் உள்ளே வரக்கூடும். ஜெய்ஸ்வால் அவருக்கு வழி விடும் நிலைமை ஏற்படலாம்” என்று கூறினார். முன்னதாக சிராஜ் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதாலயே சாம்பியன்ஸ் கோப்பையில் தேர்ந்தெடுக்கவில்லை என்று ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.