இந்தியா – இங்கிலாந்து 3வது ஒன்டே நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

IND vs ENG
- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக உள்ள இந்தியா கடைசிப் போட்டியிலும் என்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்துக் கோப்பையை முத்தமிட முயற்சிக்க உள்ளது.

மறுபுறம் 4 – 1 (5) என்ற கணக்கில் டி20 தொடரில் தோற்ற இங்கிலாந்து இந்தத் தொடரிலும் ஏமாற்றத்தையே சந்தித்தது. எனவே சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்லும் முன் ஆறுதல் வெற்றியைப் பெற இங்கிலாந்து முயற்சிக்க உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கடைசிப் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி 1.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

அகமதாபாத் மைதானம்:

மொட்டேரா என்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்த மைதானம் தற்போது 132000 ரசிகர்கள் அமரும் வகையில் உலகிலேயே பெரிய மைதானமாக நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1984 முதல் இங்கே நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா 20 முறை விளையாடியுள்ளது. அதில் 11 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா 9 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இங்கே 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 1 தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து முதல் முறையாக இம்முறை இந்தியாவை சந்திக்கிறது.

வெதர் ரிப்போர்ட்:

பிப்ரவரி 12ஆம் தேதி அகமதாபாத் நகரில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

இம்மைதானத்தில் கடந்தக் காலங்களில் ஸ்பின்னர்கள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார்கள். இருப்பினும் புதிதாக மைதானம் உருவாக்கப்பட்ட போது பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் 2023 உலகக் கோப்பையில் 240 ரன்கள் அடிப்பதற்கே திணறிய இந்தியாவை ஃபைனலில் ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையை வென்றது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கே பேட்டிங் செய்வது கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.

இதையும் படிங்க: கோலி மேல வெளிச்சத்தை வைக்காதீங்க.. ஃபார்முக்கு வர அந்த 3 ஜாம்பவான்களிடம் பேசுங்க.. ரணதுங்கா அட்வைஸ்

எனவே பெரிய ரன்கள் குவிப்பதற்கு பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை உணர்ந்து விளையாடுவது அவசியமாகிறது. மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நல்ல லைன், லென்த்தை பின்பற்றும் வேகப்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 237. இங்கே 15 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 16 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. அதனால் டாஸ் வெல்லும் கேப்டன் எதைத் தேர்ந்தெடுத்தாலும் வெற்றிக்கு நன்றாக விளையாடுவது அவசியமாகிறது.

Advertisement