இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்து வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாகவே தடுமாற்றமாக விளையாடி வரும் அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்தார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்து ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்த அவர் 12 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடியும் அரை சதத்தைக் கூட அடிக்கவில்லை. அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியிலும் 2 ரன்னில் அவுட்டான விராட் கோலி ஏமாற்றத்தையே கொடுத்தார். விரைவில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில் அவருடைய ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையைக் கொடுக்கும் விஷயமாகவே இருக்கிறது.
ஓய்வு அவரோட முடிவு:
இந்நிலையில் விராட் கோலியின் ஃபார்ம் பற்றி முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எப்போதும் விராட் கோலியை சுதந்திரமாக விடாமல் வெளிச்சத்திற்குள் வைத்து அழுத்தத்தை உண்டாக்காதீர்கள் என்று அவர் கூறினார். மேலும் ஃபார்முக்கு திரும்ப கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களிடம் விராட் கோலி ஆலோசனை கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது பற்றி ரணதுங்கா பேசியது பின்வருமாறு. “நிறைய ரன்கள் அடித்த விராட் கோலி போன்ற வீரரைப் பொறுத்த வரை ஃபார்ம் என்பது நம்மிடம் இருக்கிறதா? என்பதை அவர் தான் உணர வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓய்வு என்பது விராட் கோலி எடுக்க வேண்டிய முடிவு. எனவே அதை அவரிடம் விட்டு விடுங்கள். எனவே அதை அவரே எடுக்கட்டும்”
ஜாம்பவான்களிடம் பேசுங்க:
“அவரைப் போன்ற நட்சத்திர அந்தஸ்து மற்றும் திறமை உடைய பேட்ஸ்மேன் மீண்டும் ஃபார்முக்கு வர ஓரிரு இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்படும் என்று நான் கருதுகிறேன். இது போன்ற நேரங்களில் சுனில் கவாஸ்கர், திலிப் வெங்சர்க்கார் அல்லது ராகுல் டிராவிட் போன்றவரிடம் விராட் கோலி பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமா கம்பீர்? ராகுலை கழற்றி விட அவரை வெச்சு பிளான் நல்லா போடுறீங்க.. ஸ்ரீகாந்த் விளாசல்
“அதைத்தான் தற்போது அவர் செய்ய வேண்டும். அது அவருக்கு உதவி செய்யலாம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மா போல விராட் கோலி சதத்தை அடித்து ஃபார்முக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.



