இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 போட்டிகளிண் முடிவிலேயே 2 – 0* என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக அந்தத் தொடரில் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேட்டிங்கில் அவரை ஐந்துக்கு பதில் 6வது இடத்தில் களமிறக்கியுள்ளார். அந்த வாய்ப்பில் பெரிய ரன்கள் குவிக்காத ராகுல் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் ராகுலை பெஞ்சில் அமர வைக்க கௌதம் கம்பீர் முயற்சித்து வருவதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் விரிவாக விமர்சித்தது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு நேர்மறையான விஷயமாகும். ஆனால் கே.எல் ராகுலுக்காக நான் வருந்துகிறேன்”
கம்பீரின் சோதனை:
“ஆம் அக்சர் படேல் 30, 40 ரன்களை எடுக்கிறார். ஆனால் ராகுல் விஷயத்தில் நீங்கள் செய்வது நியாயமற்றது. ஐந்தாவது இடத்தில் அவருடையப் புள்ளி விவரங்களைப் பாருங்கள். அது சிறப்பாக இருக்கிறது. இருப்பினும் அவருடைய இடத்தில் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. 6, 7வது இடத்தில் விளையாடினால் அவரால் ரன்கள் குவிக்க முடியாது”
“ஹேய் கம்பீர் நீங்கள் செய்வது சரியல்ல. ஆம் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் இந்தியா அக்சர் பட்டேலை ஐந்தாவது இடத்தில் விளையாட வைக்கலாம். ஆனால் அதையே நீங்கள் தொடர்ச்சியாக செய்ய முடியாது. இப்படியே நீங்கள் தொடர்ந்து மாற்றங்களை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஏதேனும் முக்கியமான போட்டியில் அனைத்தும் தவறாக விழும். அதுவே எனக்கு கவலையைக் கொடுக்கிறது”
ஸ்ரீகாந்த் விளாசல்:
“இடது வலது கை பேட்ஸ்மேன்கள் தேவை. அதற்காக இதைச் செய்கிறோம் என்று என்னிடம் சொல்லி சமாளிக்காதீர்கள். அப்படியானால் டாப் நான்கில் ஏன் நீங்கள் அதைச் செய்யவில்லை? 5வது இடத்தில் மட்டும் செய்ய வேண்டுமா? தமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தும் அக் சர் பட்டேலிடம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ராகுலை 6வது இடத்தில் விளையாட வைத்தால் அதற்கு நீங்கள் ரிஷப் பண்ட்டையே விளையாட வைக்கலாமே?”
இதையும் படிங்க: ரோஹித் மாதிரி கோலியும் வந்துருவாரு.. இந்த பலம் கொண்ட டீம் தான் சாம்பியன்ஸ் ட்ராபி ஜெய்க்கும்.. முரளிதரன்
“ஏன் ராகுல் போன்றவரின் தன்னம்பிக்கையை பாழாக்குகிறீர்கள்? அதனால் ரிஷப் பண்ட் 3வது போட்டியிலும் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். ராகுல் பெஞ்சில் மீண்டும் அமரக்கூடும். என்னைக் கேட்டால் வலது இடது கை பேட்ஸ்மேன்கள் கலவை என்பனவற்றையெல்லாம் தாண்டி நீங்கள் உங்களுடைய சிறந்த வீரரை 5வது இடத்தில் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறினார்.



