IND vs WI : 1 முதல் 5 வரை எங்கயும் 30 சராசரிய தாண்டல, உங்களுக்கு அது தான் சரியான இடம் – சாம்சன் பற்றி ஆகாஷ் சோப்ரா பேட்டி

Sanju Samson Aakasch Chopra
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் விளையாடி வரும் இந்தியா ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அப்போட்டியில் இஷான் கிசான் 6, சுப்மன் கில் 3, சூரியகுமார் யாதவ் 21 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் இளம் வீரர் திலக் வர்மா தம்முடைய அறிமுகப் போட்டியில் அதிரடியாக 39 (22) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஹர்திக் பாண்டியா 19 (19) ரன்களில் அவுட்டான நிலையில் பொறுப்புடன் விளையாடி காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட சஞ்சு சாம்சன் 12 (12) ரன்களில் ரன் அவுட்டானது இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தது.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா அதிருப்தி:
2015இல் அறிமுகமாகி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்த அவர் 2022இல் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் மீண்டும் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் தற்போது ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் காயமடைந்துள்ளதால் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 2வது போட்டியில் சொதப்பினாலும் 3வது போட்டியில் அரை சதமடித்து வெற்றியில் பங்காற்றினார். ஆனால் இப்போட்டியில் மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்த அவர் டி20 கிரிக்கெட்டில் 1 முதல் 5 வரை எந்த இடத்திலும் 30க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதற்காக குறை சொல்ல விரும்பவில்லை என்றாலும் சாதாரணமாகவே நிலையான வாய்ப்புகள் கிடைக்காத சஞ்சு சாம்சன் இது போன்ற கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து ரன்களை குவிக்க தவறுவது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவரை நீங்கள் 6வது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பாமல் போனால் வேறு எந்த இடத்தில் அனுப்புவீர்கள்? ஒருவேளை நீங்கள் ஹர்திக் பாண்டியாவை அந்த இடத்தில் அனுப்ப விரும்பினால் அதை நான் விரும்பவில்லை. ஏனெனில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 5வது இடத்தில் தான் விளையாட வேண்டும்”

- Advertisement -

“பொதுவாக அனைவருமே மேல் பேட்டிங் வரிசையில் விளையாடுவதற்கு விரும்புவார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் சராசரி எந்த இடத்திலும் சிறப்பாக இல்லை. அதே சமயம் நியாயத்துடன் பேசினால் அவருக்கு மிகவும் குறைவான வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. அதாவது மற்றவர்களைப் போல் அவருக்கு தொடர்ந்து அதிகமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் 26, 16, 14, 12, 19 என்பதே டாப் 5 இடங்களில் அவருடைய பேட்டிங் சராசரியாக இருக்கிறது. இது நிச்சயமாக போதுமானதாக இல்லை”

“இதன் காரணமாக அவர் எந்த இடத்தில் தான் அசத்துவார் என்ற தெளிவு உங்களுக்கு கிடைக்கவில்லை. அதே சமயம் இந்த புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு அவர் 4வது இடத்தில் விளையாட தகுதியானவர் என்றும் நம்மால் சொல்ல முடியாது. அத்துடன் இந்த போட்டியில் சவாலான பிட்ச்சில் பழைய பந்து பேட்டுக்கு சரியாக வரவில்லை என்பதால் எளிதாக ரன் குவிப்பது கடினமாக இருந்தது. அப்படி மிகவும் கடினமான நேரத்தில் சிக்சர் அடித்து நல்ல துவக்கத்தை பெற்ற அவர் ரன் அவுட்டானார்”

இதையும் படிங்க:IND vs WI : சவாலான பிட்ச்சில் க்ளப் மேட்ச் மாதிரி வேற லெவலில் ஆடுனது அவர் மட்டும் தான் – தரமான இளம் வீரரை பாராட்டிய வாசிம் ஜாஃபர்

“எனவே அந்த ஒரு இன்னிங்ஸ் வைத்து நான் எதையும் பேச விரும்பவில்லை. ஏனெனில் 6வது இடத்தில் விளையாடுபவர்கள் எப்போதுமே பெரிய ரன்கள் குவிக்க முடியாது. இருப்பினும் சஞ்சு சாம்சன் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் இன்னிங்ஸ் விளையாடும் திறமையை கொண்டிருப்பதால் தொடர்ந்து 6வது இடத்திலேயே விளையாடலாம்” என்று கூறினார்.

Advertisement