- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதையும் மிஸ் பண்ணிட்டாங்க.. ரோஹித், கோலி, ஜடேஜாவை நாம ஒன்னா பார்ப்பது இதுவே கடைசி.. ஆகாஷ் சோப்ரா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா தற்போது 12 வருடங்கள் கழித்து மீண்டும் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

சொல்லப்போனால் சமீபத்திய நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. எனவே சாம்பியன்ஸ் டிராபியை வென்று ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.

- Advertisement -

முத்தான 3 நட்சத்திரங்கள்:

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தான் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 நட்சத்திர வீரர்கள் ஒன்றாக விளையாடப் போகும் கடைசி தொடர் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர்கள் கடந்த 2024 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே அவர்களை இனிமேல் ஐசிசி தொடர்களில் ஒன்றாக பார்க்கப் போவதில்லை என்பது தமக்கே ஆதங்கத்தைக் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “இதை கனத்த இதயத்துடன் சொல்கிறேன். இதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் துவங்க உள்ளது. அதன் பின் இந்த வருடத்தில் மற்றும் ஒரு ஐசிசி தொடர் நடைபெறுகிறது. அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல். ஆனால் நாம் அதற்கு தகுதி பெறவில்லை”

- Advertisement -

கடைசி ஐசிசி தொடர்:

“எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதில் விளையாடப் போவதில்லை. அதன் பின் அடுத்த வருடம் 2026 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஆனால் அந்த ஃபார்மெட்டில் அவர்கள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்கள் என்பதால் விளையாட மாட்டார்கள். 2027 ஒருநாள் உலகக் கோப்பை இன்னும் வெகு தூரத்தில் இருக்கிறது”

இதையும் படிங்க: கண்டிப்பா விராட் கோலியால் என்னோட அந்த சாதனையை முறியடிக்க முடியும் – கிரிஸ் கெயில் ஓபன்டாக்

“2027ஆம் ஆண்டு உலகம் வித்தியாசமாக இருக்கும். எனவே அந்த 3 வீரர்களுக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தான் கடைசி ஐசிசி தொடர் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். அது போன்ற சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றதைப் போல தற்போது சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்று அந்த முத்தான 3 நட்சத்திரங்கள் வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

- Advertisement -