பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் வேளையில் நாளுக்கு நாள் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்த செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
விராட் கோலி என்னோட சாதனையை முறியடிப்பார் :
கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி இம்முறை சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த இருப்பதால் அந்த அணி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது. அதே வேளையில் பாகிஸ்தான் செல்ல மறுத்து துபாயில் அனைத்து போட்டிகளிலும் விளையாட இருக்கும் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் முனைப்புடன் காத்திருக்கிறது.
இதன் காரணமாக இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை எட்டு முறை நடைபெற்றுள்ள இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 791 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அவரது இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு தற்போது விராட் கோலிக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதனை நிச்சயம் அவர் செய்து காண்பிப்பார் என்றும் கிரிஸ் கெயில் கூறியுள்ளார்.
விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் விராட் கோலி இதுவரை 12 இன்னிங்ஸ்களில் விளையாடி 529 ரன்கள் குவித்துள்ள வேளையில் எதிர்வரும் தொடரில் 263 ரன்களை குவித்தால் கெயிலின் சாதனையை தகர்த்து வரலாறு படைப்பார். இந்நிலையில் இந்த சாதனை குறித்து பேசியுள்ள கெயில் கூறுகையில் :
இதையும் படிங்க : கே.எல் ராகுலை டார்கெட் செய்து பழிவாங்கும் கவுதம் கம்பீர்.. இதுதான் விஷயமா – விவரம் இதோ
விராட் கோலியால் சுலபமாக இந்த தொடரில் 200 ரன்களை அடிக்க முடியும். ஏனெனில் அவர் செஞ்சுரிகளை மிக எளிதாக விளையாடிக் கூடிய வீரர். எனவே இந்த தொடரில் நிச்சயம் என்னுடைய சாதனையை அவரால் தகர்க்க முடியும். அதேபோன்று இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரினை வெல்ல இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



