IPL 2023 : பும்ராவுக்கு மாற்றாக 4 ஜே வீரர்களை களமிறக்கியும் தோத்துட்டாங்க – மும்பையை கலாய்த்த முன்னாள் வீரர்

MI Jaspirt Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டியுடன் மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. மறுபுறம் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் மும்பை 6வது கோப்பையை வெல்லும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக கடந்த வருடம் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்திற்குள்ளான அந்த அணி இந்த வருடமும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Mumbai Indians Rohit Sharma MI

- Advertisement -

இருப்பினும் 2வது பகுதியில் சூரியகுமார் யாதவ், இசான் கிசான், கேமரூன் கிரீன், திலக் வர்மா போன்ற முக்கிய வீரர்கள் முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதனால் கடைப்பாரை பேட்டிங்கை பயன்படுத்தி 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி குவாலிபயர் 2 போட்டியில் குஜராத்திடம் தோற்று வெளியேறியது. அந்த வகையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற மும்பை முடிந்தளவு வெற்றிக்கு போராடியது பாராட்டுக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஜே பவுலர்கள்:
அதை விட இந்த தொடரில் காயமடைந்த பும்ராவுக்கு பதிலாக பொறுப்புடன் செயல்பட்டு காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடி ரன்களை வாரி வழங்கி காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். கடந்த வருடம் விளையாடாமலையே 8 கோடியை இலவச சம்பளமாக வாங்கிய அவர் இந்த வருடமும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படாததால் 1 ரூபாய் கூட கொடுக்கக் கூடாது என சுனில் காவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் மும்பை ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

Jasprith Bumrah Jofra Archer

அவருக்கு பதிலாக வாங்கப்பட்ட மற்றொரு இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டான் அவரை விட வள்ளலாக ரன்களை வாரி வழங்கி தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார். அதற்கு முன்பாகவே பும்ராவுக்கு மாற்றாக செயல்படுவார் என்று நினைத்து மும்பை வாங்கிய ஆஸ்திரேலியாவின் ஜே ரிச்சர்ட்சனும் காயத்தால் வெளியேறினார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பெயரில் இருக்கும் முதல் எழுத்தில் துவங்கும் ஜோப்ரா ஆர்ச்சர், ஜோர்டான், ஜே ரிச்சர்ட்சன் போன்றவர்கள் ராசியாக இருப்பார்கள் என்று நினைத்து வாங்கிய மும்பைக்கு கடைசியில் ஏமாற்றமே கிடைத்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கலாய்க்கும் வகையில் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த சீசனில் பியூஸ் சாவ்லாவை தவிர்த்து யாருமே மும்பை அணிக்காக அசத்தவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “அவர்களின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் காயமடைந்தனர். அது ஜஸ்பிரித் பும்ராவில் தொடங்கி உள்ளே வெளியே செல்வதுமாக இருந்த ஜோப்ரா ஆர்ச்சர் வரை தொடர்ந்தது. ஜே ரிச்சர்ட்சன் விஷயத்திலும் அதே கதை தான் நடந்தது. அவர்கள் ஜே எனும் எழுத்தில் துவங்கும் அனைவரையும் வாங்கினார்கள். ஆனால் அவை அனைத்தும் அவர்களுக்கு பாதகமாக அமைந்தது”

Akash-Chopra

“ஏனெனில் அவர்கள் யாருமே ஃபிட்டாக இல்லாததால் யாரை பயன்படுத்துவது என்ற குழப்பம் இருந்தது. அதோடு நிற்காத அவர்கள் ஜே எனும் எழுத்தில் துவங்கும் ஜோர்டானையும் வாங்கினார்கள். ஆனால் அவரும் ஒவ்வொரு பந்திலும் சரமாரியாக அடி வாங்கினார். பெரும்பாலான போட்டிகளில் அவர் 4 ஓவரில் 45 – 50 ரன்களை எளிதாக கொடுத்து விடுகிறார். அவருடைய கடந்த கால புள்ளி விவரங்களை பார்க்கும் போது விக்கெட்களை எடுக்காமல் ரன்களை வாரி வழங்கும் பவுலராக இருக்கிறார் என்பது தெரிகிறது”

இதையும் படிங்க:WTC Final : இந்தியா ஜெயிக்கனும்னா அவர் அசத்தனும் – ரோஹித் சர்மாவின் துருப்பு சீட்டு பவுலரை பாராட்டிய பாண்டிங்

“இருப்பினும் இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் டி20 தொடர்களிலும் இங்கிலாந்துகாகவும் அவர் அசத்துகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை. அதே போல சுழல் பந்து வீச்சு துறையில் பியூஸ் சாவ்லா அசத்தினாலும் குமார் கார்த்திகேயா, ராகவ் கோயல், ரித்திக் ஷாக்கின் போன்றவர்கள் அசத்தவில்லை. இப்படிப்பட்ட பவுலிங் வைத்துக் கொண்டு கோப்பை வெல்வது கடினமாகும். ஏனெனில் அவர்கள் தொடர்ந்து பெரும்பாலான போட்டிகளில் 200 ரன்களை கொடுத்தனர்” என்று கூறினார்.

Advertisement