WTC Final : இந்தியா ஜெயிக்கனும்னா அவர் அசத்தனும் – ரோஹித் சர்மாவின் துருப்பு சீட்டு பவுலரை பாராட்டிய பாண்டிங்

- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்க போகும் இந்த போட்டியில் ஐசிசி தர வரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே 5 உலகக்கோப்பைகளை வென்று கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையையும் முதல் முயற்சியிலேயே வெல்ல தயாராகி வருகிறது.

- Advertisement -

மறுபுறம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக திகழும் இந்தியா கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு இம்முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த போராட உள்ளது. அந்த நிலையில் பொதுவாக இங்கிலாந்தில் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் தான் வெற்றியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

பாண்டிங் பாராட்டு:
அதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ், ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் ஆகிய மிரட்டல் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நிகராக இந்திய அணியில் சிராஜ், உமேஷ் யாதவ் இருந்தாலும் முகமது ஷமி தான் அதிக அனுபவமும் தரமும் கொண்ட பவுலராக பார்க்கப்படுகிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய பவுலர்களை விட பந்தின் சீம் பகுதியை துல்லியமான பிடித்து வீசும் திறமை பெற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய பெருமையை கொண்டவர்.

Shami

அதிலும் குறிப்பாக பிட்ச்சான பின் விக்கெட் கீப்பர் பிடிக்கும் வரை அவர் வீசும் பந்தின் சீம் பகுதி எவ்வளவு வேகத்தில் வந்தாலும் 90 டிகிரியில் இருக்கும் என்பதே அவருடைய ஸ்பெஷலாகும். இந்நிலையில் இந்த ஃபைனலில் இந்தியா வெல்ல வேண்டுமெனில் வேகப்பந்து வீச்சு துறையில் முகமது ஷமி சிறப்பாக செயல்பட வேண்டுமென்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அதே போல ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு திறமை கொண்ட ஷமி இந்திய அணியில் ரோகித் சர்மாவின் துருப்பச்சீட்டு பவுலராக செயல்படுவார் என்றும் பாராட்டும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த ஃபைனலில் இந்தியா வெல்ல வேண்டுமெனில் அவர் முன்னின்று கடுமையாக முயற்சித்து இந்த மாபெரும் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஷமி எந்தளவுக்கு தரமானவர் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். ஏனெனில் அவர் புதிய அல்லது பழைய பந்தாக இருந்தாலும் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா உட்பட மைதானம் எங்கு இருந்தாலும் சிறப்பாக செயல்படும் வல்லமை கொண்டவர்”

Ponting

அவர் எந்தளவுக்கு திறமை கொண்டவர் என்பதையும் ஆபத்தானவர் என்பதையும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் அறிய வேண்டும். எனவே அவர் தான் இந்தியாவின் துருப்புச்சீட்டு பவுலராக செயல்படுவார்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியின் முதன்மை பவுலராக இருக்கும் ஷமி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் அசத்தும் திறமை கொண்டவர்.

இதையும் படிங்க:இப்போவே சுப்மன் கில்லை அவங்க 2 பேர் கூடவும் கம்பேர் பன்னாதீங்க ப்ளீஸ் – கேரி கிறிஸ்டன் ஓபன்டாக்

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் 28 விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக சாதனை படைத்து ஊதா தொப்பியை வென்ற அவர் குஜராத் ஃபைனல் வரை செல்வதற்கு பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றினார். எனவே தற்போது சிறப்பான ஃபார்மிலும் இருக்கும் அவர் இந்த ஃபைனலில் இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement