இப்போவே சுப்மன் கில்லை அவங்க 2 பேர் கூடவும் கம்பேர் பன்னாதீங்க ப்ளீஸ் – கேரி கிறிஸ்டன் ஓபன்டாக்

Gary-Kirsten
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தாலும் குஜராத் அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அந்த அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஏனெனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுப்மன் கில் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மதிப்பு மிக்க வீரர் என்ற விருதுகளையும் வென்று அசத்தியிருந்தார். அந்த வகையில் இந்த 16-வது ஐபிஎல் தொடரில் மட்டும் 17 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 890 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

Shubman Gill

- Advertisement -

அதோடு ஒரு சீசனில் அதிக ரன்களை அடித்த விராட் கோலியின் (973 ரன்கள்) சாதனைக்கு பின்னர் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த சீசனில் மூன்று சதங்கள் அடித்ததோடு மட்டுமின்றி லீக் சுற்று போட்டிகளில் இருந்து இறுதிப்போட்டி வரை குஜராத் அணியின் வெற்றி நடைக்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.

இந்நிலையில் சுப்மன் கில்லின் இந்த சிறப்பான ஆட்டத்தை கண்ட ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று விராட் கோலி மற்றும் சச்சின் உடன் இவரை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் அவரை ஒப்பிட்டு பேசக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய குஜராத் அணியின் பயிற்சிக்குழு உறுப்பினருமானே கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Gill 1

சுப்மன் கில் ஒரு இளமையான வீரர். அவரிடம் நம்ப முடியாத அளவிற்கு திறமையும் அதற்கான உழைப்பும் இருக்கிறது. நிச்சயம் அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் தற்போதே அவரை விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவது தவறானது. ஏனெனில் இப்போதுதான் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இனிவரும் நாட்களில் அதனை தொடர்வார் என்று நம்புகிறேன். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் தற்போது மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சுப்மன் கில் திறமைக்கு நிச்சயம் இனி வரும் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் பெரும் பங்களிப்பை வழங்குவார்.

இதையும் படிங்க : WTC Final : மீண்டும் அப்டி செஞ்சீங்க கடுப்பாகிடுவேன், இந்தியாவுக்கு கருணையே காட்டாம ஆடுங்க – ஸ்மித்தை எச்சரித்த ஆலன் பார்டர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர் அற்புதமாகவே விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஆனாலும் இனிவரும் காலங்களில் வரும் தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு அவர் தனது கரியரை கையாள வேண்டியது அவசியம். அவருடைய பயணம் இன்னும் நீண்ட தூரமானது என்பதனால் இப்போதே அவரை விராட் கோலி மற்றும் சச்சின் உடன் ஒப்பிடக்கூடாது என கேரி கிரிஸ்டன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement