
இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா 27 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக சுழலுக்கு சாதகமாக இருந்த கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியது தோல்விக்கு காரணமானது. அதனால் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இலங்கையிடம் இப்படி இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
முன்னதாக அந்தத் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரை புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் 6, 7வது பேட்டிங் இடங்களில் விளையாட வைத்தது தோல்விக்கு காரணமானது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் 5வது இடத்தில் விளையாடிய ராகுல் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார்.
கூல் ட்ரிங்ஸ் தூக்க விட்டீங்களே:
ஆனால் அவரை இத்தொடரின் ஆரம்பத்தில் 7வது இடத்தில் களமிறங்கிய கம்பீர் 3வது போட்டியில் மொத்தமாக கழற்றி விட்டார். அதற்கு ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கை ஒருநாள் தொடரில் ரோஹித்தை தவிர்த்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற யாருமே நன்றாக விளையாடவில்லை என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கேஎல் ராகுலை தோல்வியின் பலிக்கிடாவாக்கி கௌதம் கம்பீர் கழற்றி விட்டதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் தேர்வு எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. அந்த முடிவு தனிப்பட்ட மதிப்பீடு மட்டுமில்லாமல் ரோகித் சர்மாவின் உள்ளீடு உட்பட பல காரணிகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 2023 முதல் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த வீரர்களிடையே ராகுல் சிறந்த சராசரியுடன் சிறப்பான செயல் திறன் கொண்டவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்”
“சமீபத்திய போட்டிகளில் ஏற்பட்ட சரிவை தவிர்த்து பெரும்பாலும் அவர் முக்கியமான ரன்கள் அடித்துள்ளார். இருப்பினும் கே.எல். ராகுலுக்கு பதிலாக துருப்புச்சீட்டு வீரரான ரிஷப் பண்ட் விளையாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய கேள்வி என்னவெனில் கேஎல் ராகுலுக்கு ஏன் அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லை? 3வது போட்டியில் நீக்கப்பட்ட ராகுல் கூல்ட்ரிங்ஸ் தூக்கினார்”
இதையும் படிங்க: இலங்கை வீரர் சொன்னது உண்மைதான்.. இந்திய அணியின் தோல்விக்கு பி.சி.சி.ஐ-க்கும் ஒரு பங்கு உண்டு – விவரம் இதோ
“நன்றாக செயல்பட்டும் அவர் கழற்றி விடப்பட்டது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதே சமயம் அவர்கள் அவசரமாக முடிவெடுக்கவில்லை. 2 போட்டிகளில் தோற்ற பின்பே இந்த முடிவை எடுத்துள்ளனர். ஆனால் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற டாப் வீரர்களும் நன்றாக செயல்படவில்லை. அப்படி இருக்க ராகுல் மட்டும் ஏன் நீக்கப்பட்டார்? கொழும்புவில் இருந்த சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளில் உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார்.