இலங்கை வீரர் சொன்னது உண்மைதான்.. இந்திய அணியின் தோல்விக்கு பி.சி.சி.ஐ-க்கும் ஒரு பங்கு உண்டு – விவரம் இதோ

IND-vs-SL
- Advertisement -

கொழும்பு நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (0-2) என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரின் முதல் போட்டி “டை”யில் முடிந்தவேளையில் அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

அதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்தது. பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 138 ரன்களுக்குசுருண்டதால் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

அதிகாரணமாக 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இந்திய அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்திய அணி அடைந்த இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் பி.சி.சி.ஐ செய்துள்ள தவறு குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் பி.சி.சி.ஐ கிரிக்கெட் போட்டிகளின் மூலம் அதிக வருவாய் கிடைப்பதால் இந்தியா முழுவதும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களையே தயாரித்துள்ளன.

- Advertisement -

மேலும் இந்தியாவில் உள்ள மைதானங்கள் பெரும்பாலும் அளவில் சிறியவை அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் வரவேண்டும் என்பதற்காக மைதான எல்லைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறிய மைதானத்தில் அதுவும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் விளையாடி பழக்கப்பட்டு விட்டனர்.

இதையும் படிங்க : வேதநாயகம்ன்னா பயம்.. இந்தியாவை மிரட்டிய இலங்கை அணிக்கு தனியாளா பயத்தை காட்டுனாரு.. அஸ்வின் பாராட்டு

அதனால் வெளிநாடுகளில் விளையாடும் போட்டிகளில் தடுமாறுகின்றனர். குறிப்பாக தற்போது இலங்கையில் முற்றிலும் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக கடுமையாக தடுமாறினார். எனவே இனிவரும் காலங்களில் இந்தியாவில் உள்ள மைதாங்களின் எல்லைகளை அதிகரித்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களையும் அமைக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement