இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் தோல்வியை சந்திக்காமல் அசத்தி வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. அதனால் அந்த தோல்வி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
முன்னதாக அந்தத் தொடரில் சுழலுக்கு சாதகமான கொழும்பு ஆடுகளத்தில் இலங்கை பவுலர்களை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாடினார்கள். குறிப்பாக அது போன்ற சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார். ஆனால் மாபெரும் அனுபவத்தைக் கொண்ட அவரும் இத்தொடரில் இலங்கை பவுலர்களிடம் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
வேதநாயகம்ன்னா பயம்:
இருப்பினும் அதே கொழுப்பு மைதானத்தில் அதே இலங்கை பவுலர்களுக்கு எதிராக கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் அதிரடியாக விளையாடி 3 போட்டிகளிலுமே இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார். குறிப்பாக நேரம் செல்ல செல்ல பிட்ச் பேட்டிங் செய்வதற்கு கடினமாக மாறும் என்பதை உணர்ந்த அவர் ஆரம்பத்திலேயே பவர்பிளே ஓவர்களில் அடித்து நொறுக்கி 58 (47), 64 (44), 35 (20) ரன்கள் விளாசி வெற்றிக்கான அடித்தளமிட்டார்.
ஆனாலும் அதை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தாதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. இந்நிலையில் தமிழ் திரைப்படத்தில் வரும் வேதநாயகம் என்றால் பயம் என்ற பிரபல வசனத்தை போல ரோஹித் சர்மா இலங்கை ஒருநாள் தொடரில் அட்டகாசமாக விளையாடியதாக அஸ்வின் பாராட்டியுள்ளார். குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிரட்டலைக் கொடுத்த இலங்கை பவுலர்களுக்கே கேப்டன் ரோகித் சர்மா பயத்தைக் கொடுத்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் மீண்டும் உயர்ந்து நின்றது எனக்குப் பிடித்தது. என்ன ஆனாலும் சரி வேதநாயகம்னா பயம் நான் அடிக்கப் போகிறேன் என்பதை மீண்டும் ரோகித் சர்மா நிருபித்துள்ளார். அபாரத்துக்கும் அதிகமாக விளையாடும் அவர் ஸ்கொயர், ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீவ்ப் போன்ற அனைத்தையும் பயன்படுத்தி அடிக்கிறார்”
இதையும் படிங்க: வெளியேறப்போகும் குமார் சங்கக்காரா.. உள்ளே வரப்போகும் ராகுல் டிராவிட் – ராஜஸ்தான் அணியில் ஏற்படவுள்ள மாற்றம்
“அதே போல வேகப்பந்து வீச்சாளர்களை காலை பயன்படுத்தி தூக்கி அடிக்கிறார்” என்று கூறினார். முன்னதாக 2023 உலகக் கோப்பை முதலே சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்கும் அணுகுமுறையை ரோஹித் பின்பற்றி வருகிறார். அதைப் பின்பற்றி 2024 டி20 உலகக் கோப்பையை அவர் கேப்டனாக வென்றது குறிப்பிடத்தக்கது.



