- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சச்சின் கிடையாது தான்.. ஆனா சென்னை டெஸ்டில் அவருக்காக ரோஹித் இதை செஞ்சுருக்கலாம்.. ஆகாஷ் சோப்ரா

வங்கதேசத்துக்கு எதிராக துவங்கியுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று எச்சரித்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக அப்போட்டியில் சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதே போல கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறிய கேஎல் ராகுல் மீண்டும் குணமடைந்து இத்தொடரில் களமிறங்கியுள்ளார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களில் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் 22* (19) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்றார்தால். ஆனால் அப்போது கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.

- Advertisement -

கேஎல் ராகுல் ஃபார்ம்:

இந்நிலையில் கொஞ்சம் சுமாரான ஃபார்மில் தடுமாறி வரும் கேஎல் ராகுலை அப்போட்டியில் 60 – 70 ரன்கள் அடித்த பின் கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நமக்கு ஒன்றரை நாட்கள் மீதமிருந்தது. 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நீங்கள் ஃபாலோ ஆனும் கொடுக்கவில்லை”

“மழையும் வரவில்லை. எனவே கேஎல் ராகுல் 60 – 70 ரன்களை அடிக்க நாம் அனுமதித்திருக்க வேண்டுமா? வாய்ப்பு இருந்ததால் நீங்கள் அதை கொடுத்திருக்கலாம். ஏனெனில் அது ஒட்டுமொத்த வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. அது உங்களுடைய பணிச்சுமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. அப்படி தாக்கம் ஏற்படாத போது 19* (22) ரன்களில் இருக்கும் ஒருவரை இன்னும் கால் மணி நேரம் விளையாட விட்டிருக்கலாம்”

- Advertisement -

சச்சின் கிடையாது:

“சச்சின் 194 ரன்களில் இருந்த போது டிராவிட் டிக்ளேர் செய்தார். ஆனால் போட்டி முடிந்த பின் நான்காவது நாளிலேயே வெற்றி பெறுவோம் என்பது தெரிந்திருந்தால் அப்போது டிக்ளேர் செய்திருக்க மாட்டேன் என்று டிராவிட் சொன்னார். அதற்காக இங்கே ராகுல் 195 ரன்களில் இருந்தார் என்று நான் சொல்லவில்லை. அவர் சச்சின் டெண்டுல்கரும் கிடையாது”

இதையும் படிங்க: சேப்பாக்கம் மைதானம்னா நான் தான் கிங்.. மீண்டும் ஒருமுறை நிரூபித்த ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ

“இருப்பினும் அவரை நீங்கள் 6வது இடத்தில் விளையாட வைத்துள்ளீர்கள். பெரும்பாலும் அவரைப் போன்ற முழுமையான பேட்ஸ்மேன் 6வது இடத்தில் விளையாட மாட்டார்கள். எனவே அவரை இன்னும் கொஞ்சம் ரன்கள் அடிக்க அனுமதித்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். அது இந்திய அணியின் வெற்றியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்காது” என்று கூறினார்.

- Advertisement -