இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த வேளையில் நேற்று செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் இந்த முதல் டெஸ்ட் போட்டியானது முடிவுக்கு வந்தது.
சேப்பாக்கம் அஷ்வினோட கோட்டை :
இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் துவங்குகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை மண்ணில் தான் கிங் என்பதை மீண்டும் ஒருவரை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் நிரூபித்து காட்டியுள்ளார்.
ஏனெனில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 133 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 113 ரன்கள் குவித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்சின் போது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இரண்டாவது இன்னிங்சில் மட்டும் 21 ஓவர்கள் வீசி 88 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததோடு சென்னை மண்ணில் தான் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க : 170 ரன்ஸ்.. உபயோகமின்றி போன தெ.ஆ ஆறுதல் வெற்றி.. ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை வெற்றி
கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிராக இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த அவர் தற்போது சதம் அடித்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி எப்பொழுதுமே சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றால் நான் ஸ்பெஷல் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



