அவங்க ஸ்ட்ராங்கா இல்ல நாம வீக்கா.. இந்திய அணியின் பிரச்சனை குறித்து ஆகாஷ் சோப்ரா கவலை

Aakash Chopra 8
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி போராடி வென்றுள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியிருந்தது. இருப்பினும் அதற்கடுத்த 3 போட்டிகளில் முக்கிய நேரங்களில் சிறப்பாக விளையாடிய இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்துள்ளது.

குறிப்பாக விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்தே சாதித்துள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் மீண்டும் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது. ஆனால் இந்த தொடரில் பேட்டிங் துறையில் ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய இளம் வீரர்கள் மட்டுமே இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சை தடுமாற்றம் இன்றி தெளிவாக எதிர்கொண்டு வெற்றிகளில் பங்காற்றினர்.

- Advertisement -

பேட்டிங் வீக்:
மற்ற படி மிகப்பெரிய அனுபவம் கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா, ஜடேஜா முதல் அறிமுகமாக களமிறங்கிய ரஜத் படிடார், சர்பராஸ் கான் உள்ளிட்ட ஏனைய அனைத்து பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்தின் சுழலுக்கு தடுமாறி வருகிறார்கள் என்றே சொல்லலாம். இத்தனைக்கும் டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர் ஆகிய இங்கிலாந்து ஸ்பின்னர்கள் இந்த தொடரில் தான் அறிமுகமானார்கள்.

ஆனால் அப்படி பெரியளவில் அனுபவமில்லாத அவர்களிடம் போய் தங்களுடைய சொந்த மண்ணில் பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோர் அளவுக்கு அனுபவமில்லாத புது முக இங்கிலாந்து ஸ்பின்னர்களிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாக முன்னாள் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது கண்டிப்பாக ஒரு பிரச்சினையாகும். ஏன் நாம் இதை செய்கிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக இங்கிலாந்தின் புதிய ஸ்பின்னர்கள் வரும் போது நாம் தடுமாறி நிற்கிறோம். நாம் ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் போன்றவர்களிடம் விக்கெட்டை கொடுக்கவில்லை. மாறாக புதிய ஸ்பின்னர்களிடம் திணறுகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த தொடரில் நாம் மோசமான பிட்ச்களை தயாரித்தது தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது”

இதையும் படிங்க: 50 ஓவர் உலககோப்பையில் விளையாடுவதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் செய்துள்ள தியாகங்கள் – இவரையா லிஸ்ட்ல இருந்து தூக்குனீங்க?

“ஆனால் இம்முறை பேட்டிங் வரிசையில் சற்று அனுபவமின்மையுடன் இருப்பது தடுமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது” என்று கூறினார். மொத்தத்தில் இங்கிலாந்து ஸ்பின்னர்கள் வலுவானவர்களா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் பலவீனமாக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்ற வகையில் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement