50 ஓவர் உலககோப்பையில் விளையாடுவதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் செய்துள்ள தியாகங்கள் – இவரையா லிஸ்ட்ல இருந்து தூக்குனீங்க?

Shreyas
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக மூன்று வகையான அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். இவர் அண்மையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வெளியிட்ட வருடாந்திர வீரர்களின் ஒப்பந்த சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்படி ஷ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட ரஞ்சி கோப்பையில் அவர் விளையாடததே காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்துள்ளது.

அதாவது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அவர் நேரடியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டு பின்னர் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்ற அவர் தனக்கு ஓய்வு தேவை என்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். தற்போது அவர் தமிழக அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இணைந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயரை அவசரப்பட்டு ஒப்பந்தப்பட்டியில் இருந்து நீக்கிவிட்டார்களோ? என்று யோசிக்க கூடிய அளவிற்கு ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக செய்த சில விடயங்கள் வெளியாகி அனைவரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டார். அதனால் ஐபிஎல் தொடரில் விளையாடினால் நிச்சயம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாது என்பதற்காகவே அவர் முற்றிலுமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாமல் வெளியேறியிருந்தார்.

- Advertisement -

அதோடு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த தொடரில் அரையிரறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்த சதத்தோடு சேர்த்து இரண்டு சதங்களுடன் 468 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனாலும் அந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி கட்டத்தில் கடுமையான முதுகு வலியடனே விளையாடி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : வீக்னெஸை பயன்படுத்தி காய் நகர்த்திய தமிழ்நாடு அணி.. செமி ஃபைனலில் ஸ்ரேயாஸை காலி செய்த சந்தீப் வாரியார்

மேலும் உலக கோப்பை தொடரின் போது மூன்று வலி நிவாரண ஊசிகளை செலுத்திக்கொண்டு தான் அவர் களத்திற்கு வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இப்படி இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அவர் காயத்திற்காக வலி நிவாரணி ஊசிகளை செலுத்திக் கொண்டு இந்திய அணிக்காக உலககோப்பையில் அர்ப்பணிப்புடன் விளையாடியுள்ளார். இப்படிப்பட்ட வீரரையா எப்படி சம்பள ஒப்பந்த பட்டியிலில் இருந்து நீக்க மனது வந்தது தெரியவில்லை.

Advertisement