வீக்னெஸை பயன்படுத்தி காய் நகர்த்திய தமிழ்நாடு அணி.. செமி ஃபைனலில் ஸ்ரேயாஸை காலி செய்த சந்தீப் வாரியார்

Shreyas Iyer 4
- Advertisement -

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் ரஞ்சிக் கோப்பை 2024 தொடரின் முக்கியமான அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் லீக் மற்றும் காலிறுதியில் வெற்றி கண்ட தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன. மார்ச் 2ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு ஆரம்பம் முதலே தடுமாற்றமாக செயல்பட்டு சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணிக்கு அதிகபட்சமாக விஜய் சங்கர் 44, வாஷிங்டன் சுந்தர் 43 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

பலவீனத்தை பயன்படுத்தி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு துவக்க வீரர்கள் பிரிதிவி ஷா 5, பூப்பேன் லால்வாணி 15 ரன்களில் அவுட்டானார்கள். அந்த நிலையில் வந்த முசீர் கான் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த அவஸ்சதி 2, கேப்டன் ரகானே 19 ரன்களில் தமிழக கேப்டன் சாய் கிஷோர் சுழலில் ஆட்டமிழந்தனர். அப்போது மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்வதற்காக களமிறங்கினார்.

குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். இருப்பினும் பேட்டிங் செய்ய வந்ததுமே அவரை தமிழக வேகப்பந்து வீச்சாளர் சந்திப் வாரியார் அட்டகாசமான பவுன்சர் பந்தை வீசி வரவேற்றார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறி அவுட்டாகும் பலவீனத்தைக் கொண்டுள்ளார் என்பதை உலகின் அனைத்து அணிகளும் நன்றாக அறிவார்கள். அந்த பலவீனத்தை பயன்படுத்திய சந்திப் வாரியர் அவருக்கு எதிராக முதல் ஓவரிலேயே பவுன்சர் பந்துகளை போட்டு அச்சுறுத்தலை கொடுத்தார். அதன் காரணமாக சுதாரித்த ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த ஓவரில் அவருடைய பந்தை இறங்கி சென்று அடிக்க முயற்சித்தார்.

இதையும் படிங்க: அவங்கெல்லாம் இல்லனா கூட இந்தியா ஜெயிக்கும்.. விளக்கத்துடன் உண்மையை சொன்ன – சுனில் கவாஸ்கர்

அதனால் அடுத்த பந்தில் சந்திப் வாரியர் லென்த்தை குறைத்து வீசினார். அதை சரியாக கணித்து விளையாட தவறிய ஸ்ரேயாஸ் ஐயர் இன்சைட் எட்ஜ் வாங்கி 3 ரன்களில் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் முசீர் கான் 55 ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய மும்பை சற்று முன் வரை 160/2 ரன்கள் எடுத்து தமிழ்நாட்டை விட முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.

Advertisement