அவங்கெல்லாம் இல்லனா கூட இந்தியா ஜெயிக்கும்.. விளக்கத்துடன் உண்மையை சொன்ன – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இந்த தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி வரும் மார்ச் 7-ம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாகவே விராத் கோலி, முகமது ஷமி ஆகியோர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினர். அதேபோன்று இந்த தொடரில் விளையாடி வந்த கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களும் காயம் காரணமாக உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி அனுபவ வீரர்கள் இல்லாததன் காரணமாக இந்திய அணியை நிச்சயம் இங்கிலாந்து அணி வீழ்த்தும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அனுபவ வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணியிடம் எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்தும் திறனுடன் உள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறிய போதும் அந்த தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது. குறிப்பாக காபாவில் மட்டுமல்லாமல், மெல்போர்னில் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அந்த தொடரை கைப்பற்றி இருந்தது.

- Advertisement -

குறிப்பாக 36 ரன்களில் ஆல் அவுட்டான பிறகு விராட் கோலி வெளியேறிய பின்னர் சிட்னியில் போராடி தோல்வியை தவிர்த்தது. அதேபோன்று ஒருவேளை அந்த போட்டியில் ரிஷப் பண்ட் நின்று விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றியை கூட பெற்று இருக்கலாம். அந்த தொடரில் இளம் வீரர்கள் காட்டிய தைரியம், துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவை இந்த இங்கிலாந்து தொடரிலும் தெரிந்தன.

இதையும் படிங்க : சச்சின், டிராவிட், கோலி, பும்ரா எல்லாரும் அதை ஈஸியா செஞ்சாங்க.. இந்திய வீரர்களுக்கு கங்குலி அறிவுரை

இந்த இங்கிலாந்து தொடரிலும் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே தான் சொல்கிறேன் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை. உறுதியான மனநிலையுடன் இருக்கும் இளம் வீரர்களே போதுமானது அதற்கு இந்த இரண்டு தொடர்களுமே சாட்சி என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement