சச்சின், டிராவிட், கோலி, பும்ரா எல்லாரும் அதை ஈஸியா செஞ்சாங்க.. இந்திய வீரர்களுக்கு கங்குலி அறிவுரை

Sourav Ganguly 23
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போதெல்லாம் பணத்துக்காக ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் முன்னுரிமையை ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களுக்கு கொடுப்பதில்லை. அந்த வரிசையில் சமீபத்தில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு இஷான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 முக்கிய வீரர்களை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் வெளிப்படையாக கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்களுடைய பேச்சைக் கேட்டு அந்த வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. அதன் காரணமாக 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து அந்த 2 வீரர்களையும் பிசிசிஐ நீக்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க ஹர்திக் பாண்டியா போன்ற சில வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக புறக்கணித்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதும் தற்போது வாடிக்கையாகியுள்ளது.

- Advertisement -

கங்குலி அறிவுரை:
இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த தரமான வீரர்கள் டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் காரணம் சொல்லாமல் விளையாடுவார்கள் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார். குறிப்பாக தங்களுடைய காலத்தில் சச்சின், டிராவிட் போன்றவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடியதாக தெரிவிக்கும் அவர் விராட் கோலி, பும்ரா, ராகுல் போன்ற தற்காலத்து வீரர்களும் பாகுபாடின்றி விளையாடுவதாக கூறியுள்ளார்.

எனவே இளம் வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக ரஞ்சிக் கோப்பையை புறக்கணிக்காமல் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து போன்ற அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் கங்குலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்கள் டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாட முடியும். உங்களால் முதல் தர கிரிக்கெட்டுடன் ஐபிஎல் கேரியரையும் வளர்க்க முடியும்”

- Advertisement -

“அதில் எந்த மோதலும் இருக்காது. ஏனெனில் ஐபிஎல் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே முதல் தர உள்ளூர் போட்டிகள் முடிந்து விடுகிறது. எனவே அதில் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நிறைய உயர்தர வீரர்கள் டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவார்கள். தற்போது நீங்கள் விராட் கோலி, ரோகித், பும்ரா, ராகுல், ரிஷப் பண்ட் போன்றவர்கள் அப்படி விளையாடுவதை பார்க்க முடியும்”

இதையும் படிங்க: யாருமே எம்எஸ் தோனியாக முடியாது.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. ஜுரேல் பற்றிய கருத்துக்கு கவாஸ்கர் விளக்கம்

“உலக அரங்கில் மிட்சேல் மார்ஷ் அவ்வாறு விளையாடுகிறார். அவர் தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் பிரிமியர் வீரர். ஹரி ப்ரூக் அது போன்ற வீரர். டேவிட் வார்னர் அதிகமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினாலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர். எங்களுடைய காலத்தில் நான், சச்சின், ராகுல் ட்ராவிட் ஆகியோர் டெஸ்ட் மற்றும் வெள்ளைப் பந்து போட்டிகளிலும் விளையாடினோம். எனவே நீங்கள் ஒன்றில் மட்டும் விளையாடி விட்டு மற்றொன்றில் விளையாட முடியாது என்று சொல்வதற்கு எந்த காரணமும் கிடையாது” எனக் கூறினார்.

Advertisement