யாருமே எம்எஸ் தோனியாக முடியாது.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. ஜுரேல் பற்றிய கருத்துக்கு கவாஸ்கர் விளக்கம்

Sunil Gavaskar 9
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் சுமாராக விளையாடிய கேஎஸ் பரத்துக்கு பதிலாக விக்கெட் கீப்பராக இளம் வீரர் துருவ் ஜுரேல் 3வது போட்டியில் அறிமுகமானார். அந்த முதல் போட்டியிலே 46 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற 4வது போட்டியில் இக்கட்டான நேரத்தில் 2 இன்னிங்ஸிலும் 90, 39* ரன்கள் அடித்த அவர் வெற்றியில் கறுப்பு குதிரையாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். அதை விட அந்த போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்ட அவர் அடுத்த எம்எஸ் தோனியாக உருவாகும் வழியில் இருப்பதாக ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் பாராட்டினார்.

- Advertisement -

கவாஸ்கர் விளக்கம்:
ஆனால் அதற்கு துருவ் ஜுரேல் திறமையான வீரராக இருந்தாலும் அனைவராலும் எம்எஸ் தோனியாக முடியாது என்று சௌரவ் கங்குலி போன்ற சில முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் துருவ் ஜுரேல் பற்றிய தம்முடைய கருத்தை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டதாக தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர் அனைவராலும் எம்எஸ் தோனியாக முடியாது என்று கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “துருவ் ஜுரேல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் சிந்தித்து பேட்டிங் செய்வது எம்.எஸ். தோனியை போன்ற உணர்வை எனக்குக் கொடுத்தது. அவர் ஓவருக்கிடையே சிக்சர் அடித்து பின்னர் சிங்கிள், டபுள் ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுகிறார். அதே போல பென் டக்கெட்டை ரன் அவுட் செய்ததிலும் ரிவர் ஸ்வீப் அடிக்க முயற்சித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த கேட்சை அபாரமாக பிடித்ததிலும் அவருடைய விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருந்தது”

- Advertisement -

“அவருடைய வயதில் எம்எஸ் தோனியும் அது போன்ற சூழ்நிலையில் இதே விழிப்புணர்வுடன் செயல்பட்டார். அதனாலேயே தோனி போல ஜுரேல் செயல்படுவதாக நான் கூறினேன். ஆனால் யாரும் எம்எஸ் தோனியாக முடியாது. இங்கே ஒரே ஒரு தோனி தான் இருப்பார். ஆனால் தோனி செய்த பல்வேறு சிறப்பான வேலைகளில் துருவ் ஜுரேல் ஒன்றை செய்தால் கூட அது இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தானதாக அமையும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 179 ரன்ஸ்.. ஆஸின்னா யார் தெரியுமா? தொடர்ந்து 31வது வருடமாக நியூஸிலாந்து மண்ணில் செய்த அமர்க்களம்

அவர் கூறுவது போல அனைத்து வீரர்களாலும் கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங், ஃபினிஷிங் போன்ற பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட தோனியாக முடியாது. அதே சமயம் துருவ் ஜுரேல் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கும் அளவுக்கு நல்ல திறமையை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement