- Advertisement -
ஐ.பி.எல்

இது தோனி டீம் இல்லை அவரோட டீம்.. சிஎஸ்கே இப்படி திடீர்னு மாறும்ன்னு எதிர்பாக்கல.. ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பதற்கு தயாராகி வருகிறது. ஏனெனில் கடந்த வருடம் மோசமாக விளையாடிய அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக கடைசி இடம் பிடித்து வெளியேறியது. அந்த தோல்விக்கு காரணமான சீனியர் வீரர்களைக் கழற்றி விட்டுள்ள சிஎஸ்கே அணி இளம் வீரர்களை நோக்கி திரும்பியுள்ளது.

அதற்காக கடந்த வருடமே கொடுக்கப்பட்ட வாய்ப்பில் ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல் ஆகிய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அசத்தினார்கள். மேலும் 44 வயதாகும் எம்.எஸ். தோனி அடுத்த வருடத்துடன் ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அந்த உத்வேகத்தால் 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களை வாங்கியது.

- Advertisement -

இது தோனி டீம் இல்லை:

குறிப்பாக இதுவரை சர்வதேச கிரிக்கெட்டின் விளையாடாத கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஆகிய இளம் வீரர்களை சென்னை அணி தலா 14.20 கோடிகளுக்கு வாங்கியது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி எப்போதும் தோனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதனால் சிஎஸ்கே அனுபவ வீரர்களை அதிகமாக தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட சிஎஸ்கே தற்போது அனுபவத்தை விட்டுவிட்டு இளமைக்கு முன்னுரிமை கொடுப்பது எதிர்பாராத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். எனவே 2026 சிஎஸ்கே அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் அணியாக காட்சியளிப்பதாக தெரிவிக்கும் ஆகாஷ் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது யாருடைய அணி ஒரு கேள்வி எனது மனதில் எழுகிறது? ஏனெனில் பொதுவாக அது தோனியின் அணியாக இருந்தது”

- Advertisement -

ருதுராஜின் இளம் சென்னை அணி:

“ஆனால் இப்போது இது தோனி அணியா? என்று நீங்கள் கேட்டால் நான் இல்லையென்று சொல்வேன். ஏனெனில் திடீரென சிஎஸ்கே அணியில் அனைத்தும் இளமையை நோக்கி நகர்கிறது. அதனால் இது தோனி அல்ல ருதுராஜ் கெய்க்வாட் அணி போலத் தெரிகிறது. பொதுவாக தோனி அணியை உருவாக்கும் போது அவர் தன்னுடன் நிறைய அனுபவத்தை வைத்துக் கொள்வார்”

இதையும் படிங்க: 15 ரன்ஸ் 2 விக்கெட்ஸ்.. பதிரனாவுக்கு பதில் அந்த 2 ஓவரை போட சிஎஸ்கே’வுக்கு பவுலர் கிடைச்சுட்டாரு.. அஸ்வின் பதிவு

“பெரும்பாலும் அவர் அனுபவ வீரர்களுக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் தற்போது அங்கே மாற்றம் நடந்துள்ளது. தற்போது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய தத்துவ மற்றும் கருத்தியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது சென்னை அணி அனுபவத்திலிருந்து சென்று இளமையை வைத்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது” என்று கூறினார்.

- Advertisement -