- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3, 5 உட்பட எல்லாரும் மாறிட்டாங்க.. இந்தியாவுக்கு புஜாரா மாதிரி ஒருத்தர் தேவை.. ஆகாஷ் சோப்ரா கவலை

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அது போக 12 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் அவமான தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் சோகத்தையும் சந்தித்துள்ளனர் என்றே சொல்லலாம்.

குறிப்பாக முதல் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா பின்னர் போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதே போல இரண்டாவது போட்டியில் 156க்கு ஆல் அவுட்டான இந்தியா 2வது இன்னிங்சில் போராடியும் படுதோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரிவு ஏற்படும் போது நங்கூரமாக பேட்டிங் செய்து ரன்கள் குவிக்கக்கூடிய புஜாரா போன்ற ஒருவர் கண்டிப்பாக இந்தியாவுக்கு தேவை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எப்போதுமே அதிரடி வேலையாகாது:

ஆனால் தற்போதைய அணியில் விக்கெட் விழுந்தாலும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அனைவரும் பேட்டிங் செய்வதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாம் புஜாராவை மிஸ் செய்கிறோமா? இது மிகப்பெரிய கேள்வி. ஒரு வீரராக அவர் அடிக்கும் ரன்களை மற்ற வீரர்களும் அடிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள்”

“அதனால் அவர் இல்லாததால் நாம் கவலைப்படவில்லை என்று நீங்கள் சொல்லலாம். ஏனெனில் புஜாரா, ரஹானே போன்ற வீரர்களிடமிருந்து நீங்கள் நகர்ந்து விட்டீர்கள். 3வது இடத்தில் சுப்மன் கில், 5வது இடத்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் அவர்களுக்கு பதிலாக விளையாடுகிறார்கள். அதனால் இயற்கையான ஆட்டமும் மாறியுள்ளது. ஆனால் தற்போதைய அணியில் புஜாரா செய்த விஷயத்தை செய்யக்கூடிய வீரர் யாருமே இல்லை”

- Advertisement -

புஜாரா ஸ்டைல்:

“அனைவருமே ஒரே மாதிரியான அட்டாக் செய்து அதிரடியாக விளையாடும் கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். யாருமே தோல்வியை தவிர்க்க டிராவுக்காக விளையாடலாம் என்று நினைப்பதில்லை. ஆனால் அது அனைத்து நேரங்களிலும் வேலை செய்யாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் ஒவ்வொரு மணி நேரமும் விக்கெட்டை விடாமல் விளையாட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது”

இதையும் படிங்க: இந்திய ரசிகர்களே என்னை மன்னிச்சுடுங்க.. சீக்கிரம் இதை செய்வேன்.. சாரி கேட்ட ஷமி.. காரணம் என்ன?

“புஜாரா விளையாடக்கூடிய கிளாமர் இல்லாத கடினமான ஆட்டம் காலை முதல் மாலை வரை விக்கெட்டை விடாமல் உங்களுக்கு வலுவை கொடுக்கும். அது போன்ற கிரிக்கெட்டையே தற்போது நாம் தவற விடுகிறோம். அப்படி விளையாடாததாலேயே நாம் அடிக்கடி பேட்டிங்கில் சீட்டுக்கட்டு போன்ற சரிவை பார்க்கிறோம். எனவே சரிவு ஏற்படும் போது அதை நிறுத்த ஒருவர் வேண்டும். எதிரணியை களைப்படையை வைத்து பந்தை பழையதாக்கி ரன்களை அடிக்கக்கூடிய புஜாரா போன்ற ஒரு ஸ்டைல் இந்திய அணியில் தற்போது காணவில்லை” என்று கூறினார்.

- Advertisement -