இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. அதை வரிசையில் இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆனால் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் 12 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய தொடர்:
அதில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறாதது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பும்ரா, சிராஜ் ஆகியோருடன் அனுபவிக்க ஷமி விளையாடுவது அவசியம். ஆனால் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி இன்னும் குணமடையவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் எப்படியும் ஆஸ்திரேலிய தொடரில் கண்டிப்பாக அவர் குணமடைந்து இந்தியாவுக்காக விளையாடுவார் என்று பிசிசிஐ செயலாளர் சில மாதங்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் பயிற்சி எடுக்கும் போது ஷமி புதிதாக முழங்காலில் சந்தித்ததாக தெரிகிறது. அதனாலேயே அவர் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று நம்பப்படுகிறது.
ஷமி மன்னிப்பு:
இந்நிலையில் ஒரு வருடமாகியும் காயத்திலிருந்து குணமடைந்து இந்தியாவுக்காக ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வர முடியாததற்காக ரசிகர்களிடம் ஷமி மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு. “எனது முயற்சிகளை மேற்கொண்டு பவுலிங் ஃபிட்னஸை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன்”
இதையும் படிங்க: அவரை கீழே களமிறக்கியது தப்பு.. கம்பீர் சொல்றதுக்கு ரோஹித் தலையாட்டக் கூடாது.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“போட்டிக்கு தயாராகவும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும். ஆனால் நான் விரைவாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் ஒரு போட்டியில் விளையாடினால் கூட உடனடியாக ஷமி ஆஸ்திரேலிய தொடரில் பாதியிலேயே தேர்வாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



