நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா கடைசியில் போராடியும் வெற்றி காண முடியவில்லை.
அதே போல புனேவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆரம்பத்திலேயே 156க்கு ஆல் அவுட்டான இந்தியா கடைசியில் போராடியும் படுதோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த தோல்விகளுக்கு சுமாராக கேப்டன்ஷிப் செய்த கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறும் அனைத்து விஷயங்களுக்கும் ரோஹித் சர்மா தலையாட்டக் கூடாது என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
46க்கு ஆல் அவுட்:
குறிப்பாக 2வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஃபார்மில் இருக்கும் சர்பராஸ் கானை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கீழே ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வைத்திருக்கக் கூடாது என்று அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்கள். ஆனால் 46க்கு ஆல் அவுட்டானது பிரச்சனை. அது 180க்கு ஆல் அவுட்டாக இருந்திருக்க வேண்டும்”
“அப்படி நடந்திருந்தால் இந்த தொடர் வேறு மாதிரி சென்றிருக்கும். மேலும் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் வாஷிங்டன் சுந்தரை மேலே அனுப்பி சர்பராஸ் கானை கீழே விளையாட வைத்திருக்கக் கூடாது. அது விசித்திரமாக இருந்தது. இது போன்ற விஷயங்களில் ரோஹித் சர்மா கவனத்துடன் இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் வேண்டுமானால் நீங்கள் அந்தப் பொருத்தங்களை செய்யலாம்”
ரோஹித் தலையாட்டாதீங்க:
“நானாக இருந்தால் பயிற்சியாளரின் தாக்கத்தை குறைவாக மெய்ன்டன் செய்வேன். ஏனெனில் பயிற்சியாளர் களத்தில் காலை வைப்பதில்லை. கேப்டன் தான் முன்னின்று வழி நடத்துகிறார். அதே சமயம் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ததற்காக கம்பீரை நீங்கள் பாராட்ட வேண்டும். ஆனால் அவருக்கு கீழே சர்பராஸ் கானை அனுப்பியது சரியான முடிவல்ல”
இதையும் படிங்க: அந்த ரெண்டுமே தெரியல.. அவங்ககிட்ட தோத்த நியூஸிலாந்திடம் தோற்க இதான் காரணம்.. பசித் அலி விமர்சனம்
“ஒருவேளை 4 ஸ்பின்னர்கள் இருந்திருந்தால் அதைச் செய்தது சரியாக இருந்திருக்கும். ஆனால் கௌதம் கம்பீரின் வாசலில் எந்த விதமான பொறுப்பையும் வைப்பது நியாயமற்றது. ஏனெனில் கிரிக்கெட்டில் ஒரு பயிற்சியாளர் செயல்திறன் மிகவும் குறைந்த செல்வாக்கு இருப்பதால் இப்போது வரை எங்களால் அதை செய்ய முடியாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



