வாஷிங்க்டன் சுந்தர் அந்த விஷயத்துக்கு செட்டாக மாட்டார். அவரை விட்டுடுங்க – ஆகாஷ் சோப்ரா சர்ச்சை

Chopra
- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில் இந்திய அணியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து தனது கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி வெளியேற தற்போது புதிய கேப்டனாக ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். தான் பதவியேற்றதிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து வரும் ரோகித் சர்மா அடுத்ததாக இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு அணியில் தற்போது பல மாற்றங்களை செய்து வலுவான அணியை கட்டமைத்து வருகிறார்.

Ishan-Kishan-Keeper

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு இணையாக இளம் வீரர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டர் இடங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஹார்டிக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் என பல வீரர்களுக்கு ஆல்ரவுண்டர் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஜடேஜா எப்போதுமே சிறப்பு வாய்ந்த வீரர் என்பதனால் அவர் எந்தவித பிரச்சினையும் இன்றி அணியில் நீடிக்கிறார். சமீபத்தில் காயத்தில் இருந்து திரும்பிய ஜடேஜா இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கூட தனது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக அவரது இடம் இந்திய அணியில் உறுதியாகியுள்ளது.

Sundar-1

ஆனால் அதே வேளையில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் முழுநேர ஆல்ரவுண்டராக செயல்பட முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சர்ச்சையான ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை ஒரு ஆல்ரவுண்டருக்கான இடத்தை ஜடேஜா ஏற்கனவே உறுதி செய்துவிட்டார். அதேவேளையில் மற்றொரு இடத்தை வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பை வழங்குவதே சரியானதாக இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் இருவருமே வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள். ஆனால் அதே வகையில் வாஷிங்டன் சுந்தரை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் பின்வரிசையில் களமிறங்கி அவரால் பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. மேலும் பந்துவீச்சில் அவர் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் அவரிடம் பேட்டிங்கில் பெரியதாக தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கிடையாது எனவே அவருக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பை வழங்கக் கூடாது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் கோலிக்கு சச்சின், கங்குலி, டிராவிட் வாழ்த்து – என்ன சொல்லியிருங்க?

அதேபோன்று ஆஸ்திரேலியா மைதானங்களில் அதிக அளவு ஸ்பின்னர்கள் தேவை கிடையாது. எனவே முதன்மை ஆல்ரவுண்டராக ஜடேஜாவுடன் வெங்கடேஷ் ஐயர் அல்லது ஹார்டிக் பாண்டியாவை ஆல்-ரவுண்டராக அனுப்பலாம் அதுவே சரியான முடிவு என்று ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் சோப்ரா தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் குறித்து இப்படி ஒரு சர்ச்சையான கருத்தினை கூறியது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement