அவங்களால அது முடியலன்னு தான் ஏற்கனவே பிரிச்சோம்.. அஸ்வின் – ஜடேஜா ஒன்னா வெச்சு 2023 உ.கோ ஜெயிக்க முடியாது – ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 3
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதில் முதலிரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கேஎல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அவரது தலைமையில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய தமிழக சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஓவர்களை வீசி 47 ரன்கள் கொடுத்து 611 நாட்கள் கழித்து முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை எடுத்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அத்துடன் தோனி உருவாக்கிய முதன்மை சுழல் பந்து வீச்சு ஜோடியான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அப்போட்டியில் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் 5 வருடங்கள் கழித்து ஒன்றாக விளையாடியதும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

பிரிந்த கதை:
அதில் ஜடேஜாவும் 10 ஓவர்கள் வீசி 51 ரன்கள் கொடுத்து டேவிட் வார்னரின் விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் 2013 – 2017 வரையிலான காலகட்டத்தில் இந்திய அணியில் அசத்திய அந்த ஜோடி 2023 உலக கோப்பையில் விளையாடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக உலக கோப்பையில் தேர்வாகியுள்ள குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் இடது கை ஸ்பின்னர்களாக இருகின்றனர்.

எனவே எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்துடன் தற்போது தேர்வாகியுள்ள அஸ்வின் உலகக் கோப்பையிலும் விளையாடுவாரா என்று எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் – ஜடேஜா ஆகியோர் 2017 வாக்கில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறினார்கள் என்பதாலேயே ஏற்கனவே பிரிக்கப்பட்டதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே அவர்களை மீண்டும் ஒன்றாக விளையாடு வைப்பது வெற்றியை கொடுக்காது என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீண்ட நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் அஸ்வின் அப்போட்டியில் ஆரம்பத்தில் சில பவுண்டரிகளை கொடுத்து தடுமாறினார் என்றாலும் கடைசியில் கம்பேக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். அவரை போலவே குறைந்த ரன்களை மட்டுமே கொடுத்த ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார்”

இதையும் படிங்க: IND vs AUS : இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட 2 இந்திய வீரர்கள். இந்த வாய்ப்பையும் யூஸ் பண்ணலனா – அடுத்த மேட்ச் காலி

“இருப்பினும் அஸ்வின் – ஜடேஜா கூட்டணி வேலை செய்யாது என்பதே என்னுடைய கவலையாகும். ஒருவேளை அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே அணி நிர்வாகம் வேறு ஸ்பின்னர்களை நோக்கி சென்றிருக்காது. அவர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறுகிறார்கள் என்பதாலேயே இந்தியா வேறு ஸ்பின்னர்களை நோக்கி நகர்ந்தது. எனவே தற்போது அவர்களை திடீரென்று கொண்டு வந்தால் உங்களுடைய பழைய திட்டம் தோற்கடிக்கப்படும் என்பதுடன் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement