பாண்டியா தல ரசிகனா இருந்தாலும் தோனி மாதிரி நடந்துக்கணும்னு அவசியமா? முன்னாள் இந்திய வீரர் யூடர்ன் பேட்டி

Pandya Tilak Varma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோற்ற இந்தியா 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் கடைசி 2 போட்டிகள் ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக கயனாவில் நடைபெற்ற இத்தொடரின் 3வது போட்டியில் இளம் வீரர் திலக் வர்மாவை 50 ரன்கள் தொடவிடாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா சுயநலமாக நடந்து கொண்டதாக ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களும் திட்டி தீர்த்தனர்.

அதாவது இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகமான திலக். வர்மா முதலிரண்டு போட்டிகளில் சவாலான மைதானங்களில் இதர வீரர்கள் தடுமாறிய போது 39, 51 என அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து வெற்றிக்கு போராடினார். அதே போல 3வது போட்டியில் 160 ரன்கள் துரத்தும் போது சூரியகுமாருடன் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த அவர் 18.4வது பந்தில் 49 ரன்களை தொட்டார். அப்போது அடுத்த பந்தில் சிங்கள் எடுத்து கடைசி பந்தில் அவர் 50 ரன்களை தொடுவதற்கான வாய்ப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாண்டியா தம்முடைய பெயரில் அதிரடியான சிக்சர் பறக்கவிட்டு ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

யூடர்ன் கருத்து:
அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இளம் வீரர்கள் வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு உதவும் உத்வேகத்தை கொடுக்கக்கூடிய 50 ரன்களை தொடும் வாய்ப்பைக் கொடுத்தால் என்ன என்று பாண்டியாவை சரமாரியாக விமர்சித்தனர். குறிப்பாக 2014 டி20 உலகக் கோப்பையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனலில் ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தும் அதை போராடி வெற்றியை கொண்டு வந்த விராட் கோலியிடம் கொடுத்த தோனி போல உங்களால் எப்போதும் வர முடியாது என்றும் ரசிகர்கள் திட்டினார்கள்.

இதற்கிடையே 14 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்படும் போது திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவசரமாக ஃபினிசிங் செய்ய இது என்ன உலகக் கோப்பையா அல்லது ரன்ரேட்டுக்காக விளையாடுகிறோமா என்று பாண்டியாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்தார். அந்த நிலைமையில் அணியின் வெற்றியை விட தனிநபரின் சாதனை தான் முக்கியமா? என்று இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டி20 கிரிக்கெட்டில் 50 ரன்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடுவதே உண்மையான சாதனை என ட்விட்டரில் பதிவிட்டார்.

- Advertisement -

அதற்கு நன்றி தெரிவித்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தனிநபர் சாதனை மீது ஆர்வம் காட்டும் இந்திய ரசிகர்களுக்கு தனது சார்பில் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் எம்எஸ் தோனியை ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பதற்காக ஹர்திக் பாண்டியா அவரைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது என முன்னாள் கேப்டன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த அவர் தற்போது யூடர்ன் அடித்து இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அது மிகவும் சுவாரசியமான ஒரு விவாதம். அந்த விவாதத்தில் ஹர்திக் பாண்டியா அதிகமாக கிண்டல்களுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானார். ஆனால் அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் ஏன் தனிநபர் சாதனையை பற்றி பேசுகிறீர்கள்? என்ற மற்றொரு தரப்பு மிகவும் ஆழமான கருத்தை பேசியுள்ளது. எனவே அது அந்த விவாதத்தின் மத்திய பகுதியாக அமைகிறது. ஒருமுறை எதிர்புறம் விராட் கோலி இருந்த காரணத்தால் எம்எஸ் தோனி ஃபார்வர்ட் டிஃபன்ஸ் ஷாட் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது”

இதையும் படிங்க:சச்சின், ரெய்னா மாதிரி அந்த 2 இளம் வீரர்களை பார்ட் டைம் பவுலராக மாத்த போறோம் – பவுலிங் கோச் பேட்டி

“ஏனெனில் விராட் கோலி ஃபினிஷிங் செய்ய விரும்பிய தோனி வெற்றிக்கான பாராட்டுகளை தாம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அப்பேர்பட்ட தோனியை தன்னுடைய ரோல் மாடலாக கொண்டிருக்கிறார் என்பதற்காக ஹர்திக் பாண்டியா அவரைப் போலவே செயல்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை” என கூறினார்.

Advertisement