சச்சின், ரெய்னா மாதிரி அந்த 2 இளம் வீரர்களை பார்ட் டைம் பவுலராக மாத்த போறோம் – பவுலிங் கோச் பேட்டி

Paras Mhambrey
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கும் இந்திய அணியில் நிறைய பிரச்சினைகள் நிலவுவது ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்துவதாக அமைகிறது. குறிப்பாக கேஎல் ராகுல் போன்ற முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பதும் 4வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சரியான மாற்று வீரர் இல்லாததும் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

அதே போல 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை வீரர்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் டாப் 6 பேட்ஸ்மேன்களுமே வலது கை வீரர்களாக இருப்பது மற்றுமொரு பிரச்சினையாகும். இது போக ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா போன்ற ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது பகுதி நேர பவுலர்களாக மாறி கணிசமான ஓவர்கள் வீசி முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்படுவது வழக்கமாகும்.

- Advertisement -

மாத்த போறோம்:
ஆனால் தற்போதைய அணியில் எந்த பேட்ஸ்மேன்களும் அவ்வாறு பந்து வீசாததே கடந்த 10 வருடமாக ஐசிசி தொடரில் சந்திக்கும் தோல்விக்கு மற்றொரு காரணமாக இருந்து வருவதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்திருந்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த அனுபவமிக்க ரோஹித் சர்மா சூப்பர்ஸ்டாராக உருவெடுத்த பின்பும் விராட் கோலி 2016 டி20 உலக கோப்பைக்கு பின்பும் பந்தை தொடவே மாட்டோம் என்ற வகையில் செயல்படுகின்றனர்.

அது போக கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் போன்ற இதர நட்சத்திர பேட்ஸ்மன்களும் பெயருக்காக கூட பந்தை எடுத்து வீசுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் இந்த தலைமுறையில் செய்த அந்த தவறை அடுத்த தலைமுறையில் செய்ய விரும்பாத இந்திய அணி நிர்வாகம் விரைவில் யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோரை பகுதி நேர பந்து வீச்சாளர்களாக மாற்ற முடிவெடுத்துள்ளதாக பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதாவது கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமாகி அசத்தி வரும் அந்த 2 இளம் இடது கை பேட்ஸ்மேன்களும் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட வருங்காலங்களில் முதன்மை வீரராக உருவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களை இப்போதிலிருந்தே சில ஓவர்களை பந்து வீச வைத்து பகுதி நேர பவுலர்களாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கும் மாம்ப்ரே இது பற்றி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 4வது டி20 போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு.

“உங்களுக்கு யாராவது ஒருவர் சில கணிசமான ஓவர்களை வீசினால் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் யசஸ்வி மற்றும் திலக் வர்மா ஆகியோர் அண்டர்-19 அளவிலிருந்து பந்து வீசுவதை நான் பார்த்துள்ளேன். அதனால் அவர்களால் இந்த அளவிலும் அந்த வேலையை செய்ய முடியும். எனவே அது போன்ற வாய்ப்புகளில் அவர்களை கொண்டிருப்பது நமக்கு நல்ல சாதகத்தை ஏற்படுத்தும். தற்போது அதற்கான வேலைகளை நாங்கள் துவங்கியுள்ளதால் விரைவில் அவர்கள் பந்து வீசுவதை நம்மால் பார்க்க முடியும்”

இதையும் படிங்க:வீடியோ : கூகுள் மேப்ஸ் நம்புனா அவ்ளோ தான், ரசிகர்களுக்கு மதிப்பு கொடுத்த தல தோனி – வைரல் பதிவு

“இருப்பினும் அதற்கு சற்று காலம் தேவைப்படும். ஆனாலும் விரைவில் அவர்கள் குறைந்தது ஒரு ஓவர் வீசுவதையாவது நீங்கள் பார்க்க முடியும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2020 அண்டர்-19 உலகக்கோப்பையில் ஃபைனல் வரை சென்ற இந்திய அணியில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் பகுதி நேர பவுலர்களாக செயல்பட்டனர். எனவே விரைவில் அவர்கள் இந்திய அணியிலும் பகுதி நேர பவுலர்களாக செயல்பட்டால் அது வருங்கால ஐசிசி கிரிக்கெட் தொடர்களின் வெற்றியில் பெரிய தாக்கத்தையும் சாதகத்தையும் உருவாக்கும் என்றே சொல்லலாம்.

Advertisement