தெ.ஆ மண்ணில் எல்லா தொடரிலும் இந்தியா ஜெயிக்க முடியாது.. காரணம் அது தான்.. ஆகாஷ் சோப்ரா ஓப்பன்டாக்

Aakash Chopra 55
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுத்த நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா வெற்றியும் கண்டது.

இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.

- Advertisement -

வெற்றி கஷ்டம்:
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களில் இந்தியா அனைத்திலும் வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தனர். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடரில் அனைத்து தொடர்களிலும் தொடர்ச்சியாக இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் ஒரு அணியாக சேர்ந்து விளையாடவில்லை”

“இங்குள்ள சூழ்நிலைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கலாம். அவர்கள் உலகக் கோப்பையில் ஓரளவு நன்றாக விளையாடினார்கள். ஆனாலும் இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். ஒருவேளை நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். எனவே நான் சொல்வது தவறாக இருந்து இந்தியா வென்றால் மகிழ்ச்சியடைவேன்”

- Advertisement -

“இந்த சுற்றுப்பயணத்தில் சில போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக இருக்கலாம். மொத்தத்தில் இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்கா 5 – 3 என்ற கணக்கில் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார். அதாவது இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தமாக நடைபெறும் 8 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 5 வெற்றிகளையும் இந்தியா 3 வெற்றிகளையும் பதிவு செய்யும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சுமாரான ரியான் பராக் மேல வெச்ச நம்பிக்கையை அவர் மேலையும் வைங்க.. ராஜஸ்தான் அணிக்கு மஞ்ரேக்கர் அட்வைஸ்

இருப்பினும் 1992 முதல் இதுவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் மட்டும் இந்தியா வென்ற சரித்திரம் கிடையாது. எனவே இம்முறை அதை மாற்றி தென்னாபிரிக்க மண்ணில் குறைந்தபட்சம் டெஸ்ட் தொடரையாவது இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement