சுமாரான ரியான் பராக் மேல வெச்ச நம்பிக்கையை அவர் மேலையும் வைங்க.. ராஜஸ்தான் அணிக்கு மஞ்ரேக்கர் அட்வைஸ்

Sanjay Manjrekar 6
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டு தேவையான வீரர்களை தக்க வைத்து முக்கியமான சில வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கி முடித்துள்ளன. அந்த வகையில் 2008 ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் தேவ்தூத் படிக்கலை லக்னோ அணிக்கு கொடுத்து அதற்கு பதிலாக ஆவேஷ் கானை வாங்கியுள்ளது.

2022 சீசனில் ஃபைனல் வரை சென்று அசத்திய அந்த அணி கடந்த சீசனில் சுமாராக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த வருடம் அந்த அணி சந்தித்தது தோல்விகளுக்கு லோயர் மிடில் ஆர்டரில் ஃபினிஷராக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரியான் பராக் சொதப்பியது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

பராக் மீதான நம்பிக்கை:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக் 2019 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஓரிரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அதனால் இவரிடம் ஏதோ திறமை இருப்பதாக கருதும் ராஜஸ்தான் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து தக்க வைத்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. ஆனால் அந்த வாய்ப்பில் 54 போட்டிகளில் 600 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள பராக் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

அதனால் கடந்த சீசனில் அவரை அதிரடியாக நீக்கிய ராஜஸ்தான் நிர்வாகம் மற்றொரு இளம் வீரர் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு கொடுத்தது. அதில் 11 இன்னிங்ஸில் வாய்ப்பு பெற்ற ஜுரேல் 152 ரன்களை 172.73 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சில போட்டிகளில் வெற்றிகளையும் பெற்று கொடுத்தார். இந்நிலையில் 5 வருடமாக சுமாராக செயல்படும் ரியான் பராக் மீது வைக்கும் அதே நம்பிக்கையை ஜுரேல் மீதும் வையுங்கள் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகத்தை சஞ்சய் மஞ்ரேக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

மேலும் ஆவேஷ் கானை டிரேடிங் முறையில் வாங்கியது சரியான முடிவு என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ரியன் பராக் மீது அவர்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்து தக்க வைத்து வருகிறார்கள். இருப்பினும் ராஜஸ்தான் அணியில் தற்போது பேட்டிங் வரிசையில் ஆழம் தேவைப்படுகிறது. அதை துருவ் ஜுரேல் செய்வார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: வெஸ்ட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 58 ரன்கள் அடித்ததன் மூலம் – சாதனை நிகழ்த்திய பட்லர்

“ஏனெனில் அந்த இடத்தில் அசத்த முடியும் என்பதை அவர் கடந்த சீசனில் காட்டினார். எனவே பராக் மீது வைத்திருக்கும் அதே நம்பிக்கையை அவரைப் போன்ற வீரர்கள் மீதும் ராஜஸ்தான் வைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. மேலும் ஆவேஷ் கானை அவர்கள் வாங்கியது சிறந்த முடிவாக அமையலாம். அவர் பிரசித் கிருஷ்ணா போன்றவருக்கு நல்ல உதவியாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement