வெஸ்ட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 58 ரன்கள் அடித்ததன் மூலம் – சாதனை நிகழ்த்திய பட்லர்

Buttler
- Advertisement -

இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜாஸ் பட்லர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 58 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சார்பாக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இவ்விரு எதிரானிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்ற வேளையில் இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

- Advertisement -

இந்த இரண்டாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்டர் 45 பந்துகளை சந்தித்து 58 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் அடித்த இந்த 58 ரன்கள் மூலம் அவர் இங்கிலாந்து வீரராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய இங்கிலாந்து வீரராக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதோடு கடைசியாக அவர் விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் தற்போது தான் முதல் அரை சதத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடிய அவர் 15 ரன்கள் சராசரியுடன் 138 ரன்களை மட்டுமே குவித்திருந்தார்.

- Advertisement -

அவ்வேளையில் அவரது பார்ம் இங்கிலாந்து அணிக்கு கவலை அளிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டு வந்து அரைசதத்தை அடித்துள்ள அவர் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 180 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 153 பேட்டிங் செய்து 5022 ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க : தம்பி உன்னோட கரியர் நல்லா இருக்கணும்னா ஐ.பி.எல் விளாயாடாத.. மும்பை வீரருக்கு அட்வைஸ் கொடுத்த – பிராட் ஹடின்

அதிலும் குறிப்பாக 40 ரன்கள் சராசரி வைத்திருக்கும் அவர் 117 ஸ்ட்ரைக் கேட்டுடன் இந்த 5000 ரன்களை கடந்துள்ளார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதம் மற்றும் 26 அரைசதங்கள் அடித்துள்ள அவர் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 162 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் 21 போட்டிகளில் விளையாடியுள்ள பட்லர் 747 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement