தம்பி உன்னோட கரியர் நல்லா இருக்கணும்னா ஐ.பி.எல் விளாயாடாத.. மும்பை வீரருக்கு அட்வைஸ் கொடுத்த – பிராட் ஹடின்

Haddin
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான மினி ஏலமானது நடைபெற உள்ளது.

ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள வேளையில் சில வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்துள்ளனர். அதனை தவிர்த்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாட நினைக்கும் வீரர்கள் அனைவரும் தங்களது பெயர்களை ஐபிஎல் நிர்வாகத்திடம் பதிவு செய்துவிட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஒரு சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் போன்ற வீரர்கள் வெளியேறியுள்ள வேளையில் மேலும் சில வீரர்களும் விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹடின் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும், ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டருமான கேமரூன் கிரீன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற வீரர்கள் கூட சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக முன்னுரிமை கொடுத்து சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரை தவிர்த்து உள்ளனர். அந்த வகையில் நீங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முக்கியத்துவத்தை கொடுத்து ஒரு சில ஐபிஎல் தொடர்களை தவிர்த்து தேசிய அணிக்காக முழுமையாக நேரத்தை செலவிட வேண்டும்.

இதையும் படிங்க : உலகமே புகழுக்கு அலையுது.. ஸ்ரீசாந்த் விவகாரத்தில் கம்பீர் மறைமுக பதிலடி.. இர்பான் பதான் ஆதரவு

ஏனெனில் தற்போதுள்ள சூழலில் அதிகமான போட்டிகள் நடைபெற்று வருவதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான உழைப்பை அளிக்க வேண்டும். எப்பொழுதுமே தேசிய அணிக்காக விளையாட முன்னுரிமை கொடுக்க வேண்டும் அதுவே சிறந்த வீரராக மாறுவதற்கான பண்பு என்று தெரிவித்துள்ளார்.

Advertisement