உலகமே புகழுக்கு அலையுது.. ஸ்ரீசாந்த் விவகாரத்தில் கம்பீர் மறைமுக பதிலடி.. இர்பான் பதான் ஆதரவு

Sreesanth Gambhir 3.jpeg
- Advertisement -

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2023 சீசனில் டிசம்பர் 6ஆம் தேதி சூரத் நகரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை தோற்கடித்த இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் அந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாக மாறியுள்ளது.

அதாவது அந்த போட்டியில் ஸ்ரீசாந்த் வீசிய பந்துகளில் கௌதம் கம்பீர் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்து அதிரடியாக பேட்டிங் செய்தார். அதனால் பெரும்பாலான பவுலர்களைப் போலவே வெறுப்பான ஸ்ரீசாந்த் அவரை பார்த்து முறைத்ததாக தெரிகிறது. அதற்கு அசராத கௌதம் கம்பீர் சில வார்த்தைகளை பிரயோகித்து சண்டையில் ஈடுபட்ட போது நடுவர்களும் சக வீரர்களும் உள்ளே புகுந்து தடுத்தனர்.

- Advertisement -

புகழுக்கு அலையுறாங்க:
இறுதியில் சொல்லக்கூடாத வார்த்தையை பயன்படுத்தி கௌதம் கம்பீர் தம்மை திட்டியதாக போட்டியின் முடிவில் ஸ்ரீசாந்த் தெரிவித்தார். மேலும் இப்படி சக வீரர்களுக்கு மரியாதை கொடுக்காத காரணத்தாலேயே வீரேந்திர சேவாக், விராட் கோலி போன்ற உங்களுடைய சொந்த மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் கூட உங்களை மதிப்பதில்லை என்றும் அவர் கௌதம் கம்பீரை கடுமையாக விமர்சித்தார்.

அதோடு நிற்காமல் “களத்தில் கௌதம் கம்பீர் தம்மை ஃபிக்ஸர்” என்று சொல்லி ஆங்கில கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக திட்டியதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ஸ்ரீசாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதாவது 2013 ஐபிஎல் தொடரில் சூதாட்டப் புகாரில் சிக்கிய விவகாரத்தை பயன்படுத்தி கௌதம் கம்பீர் தம்மை தரக்குறைவாக பேசியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்தது இந்திய ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய போது சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை தம்முடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள கௌதம் கம்பீர் “உலகம் முழுவதும் கவனம் செலுத்தும் போது புன்னகைக்கவும்” என்று கூறியுள்ளார். அதாவது தமது பெயரை பயன்படுத்தி ஸ்ரீசாந்த் கவனத்தையும் புகழையும் பெறுவதற்காக இப்படி செய்வதாக கௌதம் கம்பீர் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: உலகமே புகழுக்கு அலையுது.. ஸ்ரீசாந்த் விவகாரத்தில் கம்பீர் மறைமுக பதிலடி.. இர்பான் பதான் ஆதரவு

அதைப் பார்த்த மற்றொரு முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் “சிரிப்பு தான் சிறந்த பதில் பிரதர்” என்று பதிலளித்து கௌதம் கம்பீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்தியாவுக்காக 2007 டி20 உலகக் கோப்பையில் ஒன்றாக விளையாடிய இவர்கள் தற்போது ஓய்வு பெற்ற பின்பும் இப்படி முதிர்ச்சியை எட்டாமல் களத்திலும் களத்திற்கு வெளியே சமூக வலைதளத்திலும் சண்டை போட்டு வருவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement