டி20 கிரிக்கெட்டில் இனிமே விராட் கோலியின் இடம் அவருக்கு தானாம்.. பி.சி.சி.ஐ வைத்த டிவிஸ்ட் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை வெற்றிகரமாக பயணத்தை இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை இந்திய அணி செய்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ டி20 கிரிக்கெட்டில் அதிகளவு இளம் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கி ஒரு பலமான அணியை தயார் செய்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க நாட்டிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் டி20 கேப்டனாகவும் சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடரிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் இனி விராட் கோலிக்கு டி20 அணியில் இடம் கிடைக்காது என்ற முடிவை பி.சி.சி.ஐ கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது இடத்தில் இனி தொடர்ச்சியாக இஷான் கிஷன் விளையாடுவார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இப்படி குழப்புனா 2024 டி20 உ.கோ ஜெயிக்க முடியாது.. இந்திய அணி பற்றி பார்திவ் படேல் கவலை

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் விராட் கோலி சராசரியாக 50 ரன்கள் அடித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் மூலம் அவர் சரிவை சந்தித்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அவரை டி20 அணியில் இருந்து எடுத்துவிட்டு அவருக்கு பதிலாக அதிரடியாக அடித்து ஆடும் வீரரான இஷான் கிஷனை களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இனிவரும் டி20 தொடர்களில் விராட் கோலி இடம்பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement