இப்படி குழப்புனா 2024 டி20 உ.கோ ஜெயிக்க முடியாது.. இந்திய அணி பற்றி பார்திவ் படேல் கவலை

Parthiv Patel 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா உச்சகட்ட ஃபார்மில் இருந்தது. ஆனால் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.

அதற்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் விளையாடி வெற்றி கண்ட இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. ஆனால் இந்த தொடரில் சம்பந்தமின்றி சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடாததும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

போட்டு குழப்பாதீங்க:
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோஹித் சர்மாவா அல்லது பாண்டியாவா, விராட் கோலி போன்ற சீனியர்கள் விளையாடுவார்களா அல்லது முழுவதுமாக இளம் அணி விளையாடுமா? என்பது போன்ற நிறைய குழப்பங்கள் காணப்படுகிறது. இந்நிலையில் திறமை இருந்தும் கேப்டன் யார் எம்மாதிரியான வீரர்கள் விளையாடப் போகிறார்கள் என்ற தெளிவான பாதை தெரியும் வரை 2024 டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வெல்வது கடினம் என்று பார்திவ் படேல் கவலை தெரிவித்துள்ளார்.

இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் நமக்கு அடுத்ததாக பெரிய அளவில் போட்டிகள் இல்லாத நிலையில் சரியான கலவையை தேர்ந்தெடுப்பதே மிகப்பெரிய சவாலாகும். அதில் அடுத்ததாக நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் தொடரில் விராட் அல்லது ரோகித் அல்லது பும்ரா ஆகிய அனைவரும் விளையாடுவார்களா என்ற கேள்வி காணப்படுகிறது”

- Advertisement -

“அல்லது 2024 ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களை அவர்கள் தேர்வு செய்வார்களா? எனவே அணியை அறிவிப்பதற்கு முன்பாக உலகக்கோப்பையில் யார் விளையாட போகிறார்கள் என்ற தெளிவு வேண்டும். அவர்கள் இளம் வீரர்களை அதிகமாக தேர்வு செய்வார்கள். பொதுவாக இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஆனால் சரியான வீரர்களை தேர்வு செய்வதே பிரச்சனையாக இருக்கிறது. இந்திய அணியில் திறமை இல்லாமல் இல்லை”

இதையும் படிங்க: இத்தனை நாள் ஆடுனதே பெருசுன்னு டாக்டர் சொன்னாரு.. முன்கூட்டியே ஓய்வு பெற்றதன் பின்னணியை பகிர்ந்த ஏபிடி

“ஆனால் அவர்கள் 2023 உலகக் கோப்பை ஃபைனல் போன்ற முக்கிய போட்டிகளில் பழைய நுணுக்கங்களை கடைபிடிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக 2021 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் காலாவதியான டி20 கிரிக்கெட்டை விளையாடினார்கள். 2019இல் நம்பர் 4வது இடத்தில் யார் விளையாடுவது என்ற பிரச்சனை இருந்தது. அதை விட தற்போது ராகுல் டிராவிட் தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பாரா என்று குழப்பத்தை போலவே கேப்டன் யார் என்ற சந்தேகமும் காணப்படுகிறது. எனவே டி20 உலகக் கோப்பையில் சரியான கலவையை தீர்மானிப்பதே இந்தியாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும்” என்று கூறினார்.

Advertisement