முன்னாடியாவது பதவி இருந்தது. இப்போ அதுவும் இல்ல ஜாக்கிரதை. ரிஷப் பண்டை எச்சரித்த – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 4-ஆம் தேதி டாக்காவில் துவங்குகிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஏற்கனவே ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IND vs BAN Rohit Sharma Liton Das

- Advertisement -

அதே வேளையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடரில் இருந்தே அனைத்து வீரர்களின் ஆட்டமும் கவனிக்கப்படும் என்பதனால் சில வீரர்களுக்கு இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரானது ஒரு சோதனை தொடராக கூட இருக்கலாம்.

அந்த வகையில் சமீப காலமாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் சொதப்பி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வீணடித்து வந்தால் நிச்சயம் அவர் ஒருநாள் மற்றும் டி20 அணியிலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது என பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ரெக்கார்டை அவர் வைத்திருந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை அவரது ஆட்டம் சற்று மந்தமாகவே உள்ளதை அனைவரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்நிலையில் எதிர்வரும் இந்த வங்கதேச தொடரிலும் ரிஷப் சோபிக்க தவறினால் இந்த தொடரானது அவருக்கு கடைசி வாய்ப்பாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் துணைக்கேப்டனாக இருந்தார். அதனால் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த தொடரில் அவருக்கு எந்த பதவியும் கிடையாது. எனவே அவர் இந்த முறை சொதப்பினால் அவருக்கு பின்னால் இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக காத்திருக்கும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்கு அந்த வாய்ப்பு செல்லும்.

இதையும் படிங்க : IND vs BAN : வங்கதேச அணியை இந்த ஒரு விஷயத்துல ஈஸியா எடுத்துக்க முடியாது – ரோஹித் சர்மா பேட்டி

எனவே இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கட்டாயம் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என ஆகாஷ் சோப்ரா அவரை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement