IND vs BAN : வங்கதேச அணியை இந்த ஒரு விஷயத்துல ஈஸியா எடுத்துக்க முடியாது – ரோஹித் சர்மா பேட்டி

Rohith-2
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறிய இந்திய அணி அடுத்ததாக நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடருக்கு பின்னர் தற்போது இந்திய அணியானது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

அதன்படி டிசம்பர் 4 ஆம் தேதி துவங்கவுள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது தற்போது ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. ஏனெனில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் இந்திய அணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்ட சீனியர் வீரர்கள் மீண்டும் தற்போது இந்த வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் டீமுக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி துவங்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்த தொடர் குறித்து பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : வங்கதேச அணியை நாங்கள் எப்போதும் குறைத்து மதிப்பிட மாட்டோம். ஏனெனில் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

IND

அதோடு ஒரு அணியாக அவர்கள் மிகப்பெரிய அணிகளுக்கு கூட சவால் விடும் வகையில் விளையாடி வருகின்றனர். அதோடு வங்கதேச அணி அதன் சொந்த மண்ணிலேயே விளையாடுவதால் அவர்களுக்கு ரசிகர்களிடம் இருந்தும் கூடுதலான ஆதரவு கிடைக்கும். எனவே வங்கதேச அணியை அவர்களது மண்ணில் எதிர்கொள்வதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று ரோகித் சர்மா கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஏபிடி மறுபடியும் சூர்யகுமார் யாதவ் ரூபத்தில் விளையாடுவார்னு நினைக்கவே இல்ல – தெ.ஆ ஜாம்பவான் மகிழ்ச்சியுடன் பாராட்டு

மேலும் அங்குள்ள கிரிக்கெட் பிட்ச் குறித்து தொடர்ந்து பேசிய அவர் : வங்கதேசத்தில் இருக்கும் மைதானங்களில் பந்து சற்று நின்று மெதுவாக வரும் என்பதனால் நாங்கள் இந்த மைதானத்தின் தன்மையை விரைவிலேயே கணித்து அதற்கேற்றார் போல் விளையாட வேண்டும் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement